தொழில்கல்வி பயில ஆர்வம் உள்ள மாணவர்களுக்காக தொழில்கல்வி கல்லூரியிலும் தொழில்நுட்ப இடைநிலைப்பள்ளியிலும் பயிலும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அடுத்தாண்டு ஜனவரி மாதத்திற்கான மாணவர் சேர்க்கை பதிவு தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாண்டில் பிபிஎஸ் எனப்படும் பள்ளி சார்ந்த மதிப்பீட்டு தேர்வு எழுதிய மாணவர்களும் இதற்கு விண்ணப்பம் செய்யலாம். இம்மாதம் 11ஆம் தேதி முதல் மாணவர்கள் இணையம் வழி தொழில்திறன் கல்விக்கு விண்ணப்பம் செய்யலாம். கல்வி அமைச்சின் அதிகாரப்பூர்வ வலைத்தலமான <http://www.moe.gov.my> மூலம் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த கல்வி திட்டம் தொடர்பில் மேல்விவரங்களை ப்பெற மாணவர்கள் தங்கள் வசிப்பிடத்திற்கு அருகிலுள்ள தொழில்கல்வி கல்லூரி, தொழில்நுட்ப இடைநிலைப்பள்ளி ஆகியவற்றிற்குச் சென்று நேரடியாக தகவலை பெறலாம். இணையத்தில் விண்ணப்பம் செய்யும் மாணவர்கள் அங்குள்ள பாரத்தை முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும். தெளிவாக புரிந்து கொண்ட பின்னர் அதனை பூர்த்தி செய்வது வரவேற்கத்தக்கது. தொழில்நுட்ப கல்வி விண்ணப்பத்திற்கான இறுதி நாள் டிசம்பர் மாதம் 20ஆம் தேதியாகும். இரவு 11.59 மணிக்கு மேல் கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது. 70க்கும் மேற்பட்ட தொழில்திறன் கல்விக்கான பாடத்திட்டங்கள் இதில் உள்ளன. மாணவர்கள் தங்களுக்கு ஆர்வம் உள்ள துறையில் பதிந்துகொண்டு மேற்கல்வியை தொடரலாம். தங்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டதாக என்ற தகவலை மாணவர்கள் அடுத்தாண்டு 19ஆம் தேதி முதல் 24ஆம் தேதி முதல் இணையம் வழி தெரிந்து கொள்ளலாம். மேல் விவரங்களை பெற மாணவர்கள் 03-8884 5154/5089/5067/5088 என்ற எண்ணுடன் தொடர்பு கொள்ளலாம்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்