சீன மொழி, தமிழ் மொழி துறையில் இளங்கலை பட்டப் படிப்பினை மேற்கொள்ளும் உப்சி பல்கலைக்கழக மாணவர்களுக்கு கல்வி உதவிநிதி வழங்குவதற்கு யூ சாய் அறவாரியமும் உப்சி பல்கலைக் கழகமும் ஒப்பந்தம் செய்து கொண்டன. நேற்று காலை மணி 9.30 அளவில் உப்சி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்வில் உப்சி பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசியர் டத்தோ முனைவர் சக்காரியா காசாவும் யூ சாய் அறவாரியத்தின் அறங்காவலர் டத்தோ ஹாஜி மாமாட் பாதில் மாமூட்டும் கையெழுத் திட்டனர். நாட்டின் பழைமையான ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியாக இருந்து இன்று உப்சியாக மாற்றம் கண்டுள்ள சுல்தான் இட் ரிஸ் கல்வியியல் பல்கலைக் கழகத்தில் மட்டுமே சீனமொழி, தமிழ் மொழி துறையில் அதிகமான பயிற்சி ஆசிரியர்கள் பயில்வதாக மாமாட் பாதில் தெரிவித்தார். சீன, தமிழ்மொழி துறையைச் சேர்ந்த மாணவர்களுக்கு மட்டுமே தற்போது இக்கல்விநிதி வழங்கப் படுவதாகவும் இவ்வாண்டு மட்டும் இடைநிலைப் பள்ளி மேற்கொண்டுவரும் 133 மாணவர்களுக்கு யூ சாய் அறவாரியம் 22 லட்சத்து 77 ஆயிரம் வெள்ளி கல்வி உதவிநிதி வழங்கியுள்ளதாகக் கூறினார். தமிழ் மொழி துறையச் சேர்ந்த யுஷாந்தினி செல்வன் (தைப்பிங்), லோகேந்தினி சுப்பிரமணியம் (சுங்கை சிப்புட்), சுகன்யா சிவம் (பீடோர்), மகேஸ்வரி கருப்பையா (மூவார்), ஷாலினி சோமசுந்தரன் (தாப்பா) ஆகியோர் கல்வி உதவிநிதி பெற்ற இந்திய மாணவர்களாவர். உதவி நிதியினை வழங்க முன்வந்த யூ சாய் அறவாரியத்திற்கும் உதவிநிதியினைப் பெறுவதற்கு தங்களை தேர்வு செய்த உப்சி பல்கலைக் கழகத்திற்கும் அவர்கள் நன்றியினைத் தெரிவித்துக் கொண்டனர்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்