தேசிய விளையாட்டு தினத்தை முன் னிட்டு நடத்தப் பட்ட கபடிப் போட்டியில் கிளம் அமான் அணியினர் வாகை சூடினர். அக்டோபர் 8ஆம் தேதி தேசிய விளையாட்டு தினம் நாடு தழுவிய நிலையில் அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு ஆங்காங்கே பல போட்டி விளையாட்டுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அவ்வகையில் மலேசிய கபடி சங்கமும், சிலாங்கூர் சீக்கியர் யூனியன் கிளப் அமானும் இணைந்து மாபெரும் கபடிப் போட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். இப்போட்டியில் மொத்தம் 10 குழுக்கள் களமிறங்கி வெற்றிக்காக கடுமையாக போரா டினர். லீக் சுற்றுகளில் அசத்தில கிளப் அமான் அணியினர், சித்தா ரைடர்ஸ் அணியினர் இறுதியாட்டத்திற்கு முன்னேறினர் இறுதியாட்டத்தில் அதிரடியாக விளை யாடிய கிளப் அமான் அணியினர் 22-16 என்ற புள்ளிக் கணக்கில் சித்தா ரைடர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற கிளப் அமான் அணியினருக்கு வெற்றி கிண்ணமும், பதக்கம் உட்பட 500 வெள்ளி ரொக்கமும் பரிசாக வழங்கப்பட்டது. இப்போட்டியில் இரண்டாவது இடத்தை பிடித்த சித்தா ரைடர்ஸ் அணிக்கு 350 வெள்ளியும் பதக்கங்களும் வழங்கப்பட்டது. இப்போட்டியில் செலயாங் ஏ அணியினர் மூன்றாவது இடத்தையும், செலயாங் பி அணியினர் நான்காவது இடத்தையும் பிடித்தனர். போட்டியில் வெற்றி பெற்றவர்க ளுக்கு கிளம் அமானின் தலைவர் கெகன் டீப், துணைத் தலைவர் டத்தோ பல்ஜிட் சிங், மலேசிய கபடிச் சங்கத்தின் உதவித் தலைவர் ஹர்பால் சிங், தலைமை செயலாளர் பீட்டர் உட்பட பல பிரமுகர்கள் பரிசு களை எடுத்து வழங்கி சிறப்பித்தனர்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்