தோற்றுவிடுவோம் என்ற பயம் தனக்கில்லை என்று பார்ட்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் சூளுரைத்தார். பிரிந்து கிடக்கும் எதிர்க்கட்சிகளை எல்லாம் ஒரே சக்தியாக ஒன்றுபடுத்துவது மாபெரும் பணி என்பதனை நான் ஒப்புக் கொள்கிறேன். எனினும் இது ஒரு சவால். இதற்காக நான் ஆயத்தமாக இருக்கிறேன். இதில் தோல்வியடைந்துவிடலாம் என்ற அச்சம் எல்லாம் எனக்கு அறவே இல்லை. முயற்சி செய்யாமல் தோல்வியடைவதைவிட அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்ட பிறகு தோல்வி காணுவது எவ்வளவோ மேல். அனைத்து எதிர்க்கட்சிகளையும் இணைக்கும் பாலமாக நான் எனது பங்கினை ஆற்ற முடியும். பாஸ் கட்சியினருடன் பேசி பார்த்தபோது அவர்கள் ஒத்துழைப்பு நல்க தயாராக இருக்கிறார்கள். மக்கள் மாற்றம் வேண்டும் என்கிறார்கள். எங்களின் பெர்சத்து கட்சியின் போராட்டத்திற்கு இதுவே உத்வேகமாக இருக்கிறது. பிகேஆர், அமானா, ஜசெக ஆகிய கட்சிகளைக் கொண்டு ஒரு பொதுவான தளத்தை அமைப்பதற்கு பெர்சத்து கட்சி எந்தவொரு பிரச்சினையையும் எதிர்நோக்கவில்லை என டான்ஸ்ரீ மொகிதீன் யாசின் சுட்டிக்காட்டினார். நேற்று முன்தினம் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்திற்கு ஒரு வழக்கிற்கு வந்திருந்த பி.கே.ஆர். கட்சியின் ஆலோசகர், டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை சந்தித்து சுமார் 30 நிமிடம் பேசினார் மொகிதீன். இதுகுறித்து செய்தியாளர்கள் வினவியபோது, அன்வாருக்கு தார்மீக ஆதரவை வழங்க முன் வந்து இருப்பதாகவும், எதிர்க்கட்சிகளை ஒரு குடையின் கீழ் இணைக்கும் முயற்சி குறித்து அன்வாரிடம் மனம் விட்டுப் பேசியதாகவும் தெரிவித்தார். பெர்சத்து கட்சி, 14ஆவது பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹாராப்பானுடன் ஒத்துழைத்து தேசிய முன்னணியை கவிழ்க்க நோக்கம் கொண்டிருப்பதால் அன்வாருடன் நல்லுறவுகளை வளர்த்துக் கொள்வது அவசியம் என்றார் மொகிதீன். இப்போது நான் செய்வதை என் 45 ஆண்டு கால அரசியல் வாழ்வில் கனவுகூட கண்டதில்லை. எல்லாமே மலேசியாவைக் காப்பாற்றத்தான் என்றார் மொகிதீன்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்