அரசியல் நன்கொடைகள் தொடர்பாக சீர்திருத்தங்களைக் கொண்டுவரும் புதிய உத்தேச சட்டத்தை ஜசெக எதிர்க்க வில்லை. ஆனால், அத்தகைய சட்டம் எதிர்க்கட்சிகளுக்கு எதிராகவும் ஆளுங்கட்சிக்குச் சாதகமாகவும் பயன்படுத்தப்ப டுவதை தாங்கள் ஆதரிக்க இயலாது என்று பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்தார். தற்போது முன்மொழியப் பட்டிருக்கும் அரசியல் நன்கொடை தொடர்பான புதிய சீர்திருத்தமானது, ஒரு தந்திரம். 1எம்டிபியின் 53 பில்லியன் ரிங்கிட் ஊழல் மற்றும் 4.2 பில்லியன் ரிங்கிட் நன்கொடை விவகாரம் மீதான சர்ச்சைகள் அனைத்தையும் மூடி மறைப்பதற்காக செய்யப்படும் காரியம் என்று லிம் குவான் எங் சாடினார். உலகளாவிய இந்த மெகா ஊழல்களுக்கான பொறுப்பிலிருந்து தேசிய முன்னணி அப்படியே ஒதுங்கிக் கொள்ள வழி பார்க்கிறது என்றார் அவர். மேலும், இந்த அரசியல் நிதி மீதான சீர்திருத்தம், பண அரசியலை ஒரு நிறுவனமயமாக்கி விடக்கூடாது. அரசியல் நிதி மற்றும் நன்கொடைகளை கண்காணிக்கக்கூடிய அந்த நிர்வாக அலுவலகம், அரசியல் நன்கொடைகளைப் பறிமுதல் செய்யும் தனது அதிகாரத்தை எதிர்க்கட்சிகளுக்கு எதிராகப் பிரயோகித்து, நிதி ரீதியில் அவற்றை முடக்கி வைக்கும் வேலையில் தொடக்கத்தில் ஈடுபடும் என்று லிம் குவான் எங் சுட்டிக்காட்டினார். பின்னர், கால ஓட்டத்தில் அரசியல் நன்கொடைகளைக் கண்காணிக்கும் அந்த அமைப்பு, தேசிய முன்னணியின் நலன்களை மட்டும் காப்பாற்றும் ஓர் அமைப்பாக மாறிவிடும் என்று அவர் குறிப்பிட்டார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்