இந்தியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி பல்வேறு நாடுகளில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தலைமையில் அந் நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அதிகாரிகள், அமெரிக்காவில் வசிக்கும் இந்திய பிரமுகர்கள் ஆகியோர் வாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடுவது மரபாக உள்ளது. இந்த கொண்டாட்டங்களில் அந்நாட்டில் வாழும் இந்திய பிரமுகர்கள் பங்கேற்பதும் வழக்கமாக நடைபெற்று வருகிறது. இந்திய மக்களின் முக்கிய திருநாளான தீபாவளியை கௌரவிக்கும் வகையில் அமெரிக்க அரசின் சார்பில் சிறப்பு தபால்தலை வெளியிட வேண்டும் என இந்திய மக்கள் நல சங்கங்களை சேர்ந்தவர்கள் பலகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், இந்த கோரிக்கைகளை ஏற்று இந்த ஆண்டு தீபாவளி சிறப்பு தபால்தலையை அமெரிக்க அரசின் தபால் துறை வெளியிட்டுள்ளது. வாண வேடிக்கை பின்னணியில் தீபம் எரிய, என்றென்றும் அமெரிக்கா 2016 என்ற வாசகங்களுடன் வடிவமைக்கப்பட்ட இந்த தபால்தலை நேற்று முன் தினம் வெளியிடப்பட்டது. இந்த விழாவில் இந்திய தூதர் ரிவா கங்குலி தாஸ், காங்கிரஸ் உறுப்பினர் கரோலின் மெலோனி, தீபாவளி தபால்தலை திட்ட அதிகாரி ரஞ்சு பத்ரா, அமெரிக்க தபால் அலுவலகத்தின் துணைத் தலைவர் பரிதா மெஹ்ரா, இந்தியாவின் முன்னாள் தூதர் ஹர்தீப் சிங் மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரவி பத்ரா ஆகியோர் கலந்து கொண்டனர்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்