வரும் 2017- ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படு வதற்கான இறுதி கட்டத்தில் உள்ளது என நிதித்துறை துணை அமைச்சர் டத்தோ ஒஸ்மான் அஜிஸ் கூறியுள்ளார். பல தரப்பு மக்களின் கருத்துகளை யும் பரிந்துரைகளையும் கருத்திற் கொண்டு அத்திட்டம் வகுக்கப்பட்டிருப் பதாக அவர் சொன்னார். அடுத்தாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக் இம்மாதம் 21- ஆம் தேதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவிருக்கிறார். அது தொடர்பான எதிர்பார்ப்புகள் மேலோங்கி வரும் நிலையில், ஒரு புறம் ஐயமும் நிலவி வருவது மறுப்பதற்கில்லை. கூடுதல் ஒதுக்கீடு, குறைக்கப்படும் செலவீன ஒதுக்கீடு போன்ற மாற்றங்களை பல்வேறு அமைச்சுகள் எதிர்பார்த்துள்ளன. மேலும், 2017 ஆம் வரவு செலவு திட்டத்தில் பொருள் சேவை வரியில் ஏற்றம் இருக்காது என ஒஸ்மான் உறுதியளித்துள்ளார். மக்களுக்கு மேலும் சுமையை ஏற்படுத்தும் அம்சங்களுக்கு இடமளிக்கப்படாது என தாம் நம்புவதாகவும் அவர் சொன்னார். நடப்பில் உள்ள ஆறு விழுக்காடு பொருள் சேவை வரி, தேசிய பொருளாதாரத்தை நிர்வகிக்க போதுமானது. கடந்தாண்டு ஏப்ரல் முதல் தேதி அறிமுகம் கண்ட பொருள் சேவை வரியை அதிகரிக்க தற்போதைக்கு உத்தேசமில்லை என அவர் சொன்னார். மேலும், நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் பெறுவோர் தங்கள் வசதிக்கு ஏற்ற விலையிலான வீடுகளை வாங்குவதற்கு வசதியாக அடுத்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் கீழ் புதிய கடன் வசதிகள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விவகாரத்திற்கு அரசாங்கம் உரிய கவனம் செலுத்த வேண்டும் என வட மலேசிய பல்கலைக்கழகத்தின் சட்ட மற்றும் அனைத்துலகப் பிரிவுக்கான தலைவர், இணைப் பேராசிரியர் டாக்டர் அஹமட் மார்த்ஹாடா முகமட் கூறியுள்ளார். வாழ்க்கைச் செலவீனங்கள் உயரும் போது , கட்டுமானப் பொருள்களும் இயல்பாகவே விலை ஏற்றம் காணும். இது வீடுகளின் விலையை அதிகரிக்கச் செய்யும் என அவர் மேலும் குறிப்பட்டார். இவ்வாறாக, 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் குறித்து பல தரப்புகளுக்கு இடையே பலவாறான கருத்துகளும் எதிர்பார்ப்புகளும் மேலோங்கியுள்ள நிலையில், அடுத்த இரு வாரங்களில் பிரதமர் சமர்ப்பிக்கவிருக்கும் வரவு செலவு திட்டம் மக்கள் திட்டமாக அமையும் என்றே பலரும் எதிர்பார்க்கின்றனர்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்