ஐ.பி.எப். கட்சிக்காக வழங்கப்பட்ட உயரிய டத்தோ விருது கட்சிக்கு சம்பந்தமே இல்லாத தனிநபருக்கு சட்டவிரோதமாக தாரை வார்க்கப்பட்டு இருப்பதாக அக்கட்சியின் தேசியத் தலைவர் டத்தோ சம்பந்தனுக்கு எதிராக அதன் ஸ்தாபகர்களில் ஒருவரான மு.வீ. மதியழகன் நேற்று போலீசில் புகார் செய்துள்ளார். மாமன்னரால் வழங்கப்பட்ட மத்திய அரசாங்கத்தின் மிக உயரிய விருதான டத்தோ விருது சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டு இருப்பதாக தாம் சந்தேகிப்பதால் இது குறித்து போலீசார் தீவிர புலன் விசாரணை செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். கட்சியின் துணைத் தலைவராக கடந்த 2011 முதல் 2013 வரையில் ஜோர்ஜ் முனுசாமி இருந்துள்ளார். 2013 முதல் 2016 வரையில் பேரா மாநிலத்தை சேர்ந்த வாசு துணைத் தலைவராக இருந்துள்ளார். தற்போது இருவருமே தங்கள் ஆதரவாளர்களுடன் ஐ.பி.எப். கட்சியிலிருந்து வெளியேறி விட்டனர். இதற்கு அடிப்படை காரணம், தேசிய முன்னணியின் ஆதரவு கட்சி என்ற முறையில் ஐ.பி.எப். கட்சிக்கு மத்திய அரசாங்கம் வழங்கிய டத்தோ விருதை கட்சிக்கு அறவே சம்பந்தம் இல்லாத நபருக்கு சம்பந்தன் சட்டவிரோதமாக தாரை வார்த்துக்கொடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாக தங்கள் ஆதரவாளர்களுடன் அவர்கள் கட்சியிலிருந்து வெளியேறியுள்ளனர். இது ஒரு களவாடலாகும். இதற்கு துணைப்போனவர் சம்பந்தன். மாமன்னரால் வழங்கப்படும் டத்தோ விருது நியாயமாக கட்சிக்கு உழைத்த மூத்த உறுப்பினர்களுக்கு அல்லது பொறுப்பில் இருப்பவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். ஆனால் கட்சிக்கு அறவே தொடர்பு இல்லாத நபரின் பெயர் மத்திய அரசாங்கத்திடம் பரிந்துரைக்கப்பட்டு அந்த டத்தோ விருது பெறப்பட்டிருக்கிறது. இதன் மூலம் டத்தோ சம்பந்தன் மாமன்னரையும் மத்திய அரசாங்கத்தையும் ஏமாற்றியிருக்கிறார். உரிய நபருக்கு சேர வேண்டிய விருது, தவறான நபருக்கு சென்று இருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது பித்தலாட்டம் மட்டும் அல்ல. இது ஒரு கடுமையான குற்றம் ஆகும். எனவே அந்த டத்தோ விருதை திரும்ப பெறுவதற்கும், ஐ.பி.எப். தலைவர் என்ற தனது அதிகாரத்தை சம்பந்தன் துஷ்பிரயோகம் செய்வதற்கும் அவருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று செந்தூல் போலீஸ் நிலையத்தில் செய்த புகாரில் மதியழகன் கேட்டுக்கொண்டுள்ளார். எதிர்காலத்தில் டத்தோ விருதை விற்பனை போர்வையில் கொண்டு செல்லப்படும் செயலை முறியடிப்பதற்கு இப்போதே நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்