அமலாக்க அதிகாரிகளின் ஒழுங்கீன நடவடிக்கைகளை விசாரணை செய்து வரும் இஏஐசி எனும் அமலாக்கப் பிரிவின் உயர்நெறி ஆணையம், தனது பரிந்துரைகள் பெரும்பாலும் மதிக்கப்படாதது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளது. ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டியவர்கள் எளிய முறையிலான தண்டனைகளை விதிப்பதால், தவறு செய்பவர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள் என இஏஐசி தலைவர் யாக்கூப் முகமட் சேம் கூறினார். வழக்கமாக, ஆணையம் அதன் விசாரணையை முடித்ததும், அதன் முடிவுகள். பரிந்துரை கள், என்ன தண்டனை என்பதையெல்லாம் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் ஒழுங்கு நடவடிக்கை பிரிவுக்கு அனுப்பி வைக்கும். சில சமயம், அதிகாரிகளின் முறையீட்டைக் கேட்டு அவர்கள் தண்டனையைக் குறைத்து விடலாம். ஆனால், பரிந்துரைக்கப்பட்ட தண்டனைக்கும் உண்மையில் கொடுக்கப்படும் தண்டனைக்குமிடையில் மிகப் பெரிய வேறுபாடு இருந்தால் அது ஏன் என்று எங்களுக்குத் தெரிந்தாக வேண்டும், என யாக்கூப் தெரிவித்ததாக ஸ்டார் இணையத்தள ஏடு கூறுகிறது. எடுத்துக்காட்டாக, ஆறு மாதச் சம்பளத்தை நிறுத்துமாறு ஆணையம் பரிந்துரைக்கும். ஆனால், அதிகாரிக்கு ஓர் எச்சரிக்கை மட்டுமே விடுக்கப்பட்டு விவகாரம் முடிவுக்கு வரும். இது மிக எளிய தண்டனை. இதனால் எந்தத் தாக்கமும் ஏற்படாது. அது மற்ற அதிகாரிகளுக்கு ஒரு சரியான செய்தியை உணர்த்துவதாகவும் இருக்காது என்றாரவர்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்