அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி கையூட்டு பெற்று வந்ததாக நம்பப்படும் சபா குடிநீர் இலாகாவைச் சேர்ந்த இரு மூத்த அதிகாரிகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்ததில் 11 கோடியே 20 லட்சம் வெள்ளி மதிப்புள்ள கட்டுக் கட்டான பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் வரலாற்றில் அரசாங்க சார்பு நிறுவனத்தைச் சேர்ந்த இரு மூத்த அதிகாரிகளிடமிருந்து மிகப் பெரிய தொகை பறிமுதல் செய்யப்பட்டது இதுவே முதல் முறையாகும். அந்த தொகையில், வெ.4 கோடியே 50 லட்சம் ஓர் இயக்குநரிடமிருந்தும், வெ.72 லட்சம் ஒரு துணை இயக்குநரிடமிருந்தும் பறிமுதல் செய்யப்பட்டதாக எம்.ஏ.சி.சி. துணைத் தலைமை ஆணையர் டத்தோ அஸாம் பாக்கி கூறினார். அரசாங்க ஊழியர்கள் சம்பந்தப்பட்ட மிகப்பெரிய தொகை இதுவாகும். கடந்த காலங்களில் நாங்கள் கைப்பற்றிய பெரிய தொகை என்றால் அது ஒரு கோடி வெள்ளியாகும். சபாவில் மேற்கொண்ட நடவடிக்கையில், எம்.ஏ.சி.சி. அந்த அதிகாரிகளின் வீடுகளில் சோதனை மேற்கொண்டது. அந்த அதிகாரிகளுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் சொந்தமான வங்கிக் கணக்குகளில் இருந்து 2 கோடியே 30 லட்சம் வெள்ளியையும் நாங்கள் கைப்பற்றினோம். ஆறு சேமிப்புப் பெட்டகங்களையும் பறிமுதல் செய்தோம். அவற்றில் ஒன்றில் 25 லட்சம் வெள்ளி ரொக்கம் இருந்தது. அந்த அதிகாரிகளில் ஒருவருக்கு தொடர்புடைய நிறுவனத்தின் வங்கிக் கணக்கிலிருந்து 3 கோடியே 70 லட்சம் வெள்ளியையும் எம்.ஏ.சி.சி. முடக்கி வைத்துள்ளது. இந்நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட இதர பொருள்களில், ஆடம்பரக் கார்கள், தங்க நகைகள், கைப்பைகள், 127 நிலப்பட்டாக்கள் ஆகியனவும் அடங்கும். தங்கள் இலாகாவின் கீழான குத்தகைகளை தங்கள் உறவினர்களுக்கு வழங்கி வந்ததான சந்தேகத்தின் பேரில் 51, 54 வயதுக்கு உட்பட்ட அந்த இரு அதிகாரிகளும் நேற்று முன் தினம் கைது செய்யப்பட்டனர். அந்த இரண்டு அதிகாரிகளுமே கடந்த 2010-ஆம் ஆண்டு தொடக்கம் மொத்தம் 330 கோடி வெள்ளி மதிப்புள்ள குத்தகைகளை கையாண்டு வந்துள்ளனர் என்று அஸாம் குறிப்பிட்டார். நேற்று இங்கு நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில், எம்.ஏ.சி.சி. அதிகாரிகள் கைப்பற்றிய பொருள்கள், ரொக்கம் அனைத்தும் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. அந்நிய நாணயம், விலையுயர்ந்த கைகடிகாரங்கள் ஆகியனவும் அவற்றுள் அடங்கும். இவர்கள் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, அந்த துணை இயக்குநரின் 55 வயது சகோதரரையும் (தொழில் அதிபர், டத்தோ அந்தஸ்து உடையவர்), மற்றொருவரின் 50 வயது சகோதரரையும் (கணக்காய்வாளர்) போலீசார் கைது செய்தனர்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்