ராதிகா ஆப்தே, 'வெற்றி செல்வன்' என்ற படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு அறிமுகமானார். அந்த படத்தில் அவர் அஜ்மலுக்கு ஜோடியாக நடித்தார். அதையடுத்து பிரகாஷ்ராஜின் 'தோனி,' கார்த்தியின் ஆல் இன் ஆல் அழகு ராஜா ' ஆகிய படங்களில் அவர் நடித்திருந்தாலும், 'கபாலி' படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமானார். ராதிகா ஆப்தே, 'பர்சேட்' என்ற இந்தி படத்தில் நடித்தார். இந்த படத்தில், அவர் ஒரு நிர்வாண காட்சியில் நடித்து இருக்கிறார். இப்படத்தின் சில காட்சிகள் சில நாட்களுக்கு முன்னர் இணையத்தில் லீக் ஆனது. அதில், ராதிகா ஆப்தேவும், அதில் ஹுசைனும் ஆடைகள் இல்லாமல் இருப்பது போன்ற காட்சிகள் இருந்தது. இது, ‘ராதிகா ஆப்தேவின் ஆபாசக் காட்சி' என்ற பெயரில் இணையத்தில் வைரலாக பரவியது. தற்போது இந்த சர்ச்சை தணிந்து வந்த நிலையில் தற்போது பத்திரிகையாளர் சந்திப்பில் நிருபர் ஒருவர் கேட்ட கேள்விக்கு ராதிகா ஆப்தே கோபமாக பதில் அளித்தார். நிருபர் ஒருவர் படம் வெளியாவதற்கு முன் அந்த சர்ச்சைக்குரிய வீடியோ காட்சி வெளியிடபட்டு படத்தை வெற்றிபெற வைக்க இந்த சர்ச்சைக்குரிய காட்சி வெளியிடபட வேண்டுமா? என கேட்டார். இதனால் ராதிகா ஆப்தே மிகுந்த கோபமடைந்து அவர் நிருபரிடம் கூறியதாவது:- மன்னிக்கவும், ஆனால் உங்கள் கேள்வி அபத்தமானது. சர்ச்சைகள் உங்களை போன்றவர்களால் மக்கள் மூலம் செய்யபட்டுகின்றது.நீங்கள் அந்த வீடியோவை பார்கிறீர்கள் பின்னர் அதை அடுத்தவர்களுக்கு வழங்குகிறீர்கள்,உங்களைபோன்ற நபர்களால் தான் இது போன்ற சர்ச்சைகள் ஏற்படுகிறது. நான் ஒரு நடிகை, நான் எனக்குரிய வேலையை சிறப்பாக செய்து உள்ளேன்.நீங்கள் உங்கள் கூடாரத்தை விட்டு வெளியே வாருங்கள் உலக சினிமாவை பாருங்கள். வெளிநாட்டு மக்கள் என்ன செய்கிறார்கள் என பாருங்கள், எந்த மக்கள் வெற்றிகரமாக செயல்படுகிறார்கள் என பாருங்கள்.அவர்களின் உடல்களை பார்த்து அவர்கள் வெட்கபடுவது இல்லை.அவ்வாறு நிருந்தால் ஒரு வேளை நீங்கள் என்னிடம் இந்த கேள்வியை கேட்டு இருக்க மாட்டீர்கள்.அவர்களின் உடல்களை பார்த்து வெட்கப்படும் மக்கள் மற்றவர்களின் உடல்களைபற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் உடையவர்களாக இருப்பார்கள்.நீங்கள் ஒர் உடலை நாளை நிர்வாணமாக பார்க்க வேண்டும் என்றால் முதலில் உங்கள் உடலை கண்ணாடியில் பார்த்து கொள்ளுங்கள் அல்லது மாறாக என் வீடியோவை உங்களைபோன்று பாருங்கள். என கூறினார். பின்னர் அந்த நிருபர் தங்கள் மனம் வருந்தி இருந்தால் மன்னிக்கவும் என மன்னிப்பு கோரினார். அதற்கு ராதிகா ஆப்தே எனக்கு மிக வருத்தமாக இருக்கிறது.நீங்கள் உங்களைபற்றி முழுமையாக தெரிந்து கொள்ளவேண்டும் முதலில் அதை செய்யுங்கள் என கூறினார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்