பொதுமக்களின் நலன்களைக் காக்கும் காவலன் என்ற தமக்குரிய பணியை அச்சமின்றி, யாருக்கும் சாதகமின்றி சட்டத்துறைத் தலைவர் (ஏஜி) நிறைவேற்ற வேண்டும். ஏனெனில் அவர் அரசியல் அமைப்புச் சட்ட ரீதியில் அந்தப் பொறுப்பில் அமர்த்தப் பட்டுள்ளார் என முன்னாள் கூட்டரசு நீதிமன்ற நீதிபதி கோபால் ஸ்ரீராம் வலி யுறுத்தினார். அமைச்சர்கள், அர சாங்க உயர் அதிகாரிகள் மற்றும் வேண்டியவர் என எவருடைய நலன்களும் சட்டத்துறைத் தலைவரின் மனதுக்குள் நுழையவேக் கூடாது. அவருக்கு இரண்டு கிரீடங்கள் உண்டு. ஒன்று அரசாங்கத்திற்கு சட்ட ஆலோசனை வழங்கும் தலைமை ஆலோசகர். மற்றொன்று, அவர் ஒரு பப்ளிக் பிராசிகியூட்டர் என்பதாகும் என்று கோபால் ஸ்ரீராம் சொன்னார். தம்மிடம் கோரிக்கை வைக்கப்படும் போது சட்ட திட்டங்களுக்கு ஏற்ப ஆலோசனைகள் வழங்குவதில் மட்டும் தான் அக்கறை காட்டவேண்டும். அதேவேளையில், ஒரு பப்ளிக் பிராசிகியூட்டர் என்ற முறையில் தம் முன்னால் வைக்கப்படும் ஆதாரங்கள், தண்டிக்கத் தேவையான அளவில் இருக்கிறதா? என்பதை மட்டும் அவர் கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். சட்டத்துறை தலைவர் என்பவர், நேர்மையாகவும் கட்சி மற்றும் அரசாங்கம் என்றெல்லாம் பாரபட்சம் பாராமலும் செயல்பட வேண்டும் என்று கூட்டரசு முன்னாள் தலைமை நீதிபதி முகமட் சுப்பியான் முன்பு ஒருமுறை கூறியிருப்பதை கோபால்ஸ்ரீராம் சுட்டிக்காட்டினார். எந்தவொரு நபராலும் அதிகாரத் துஷ்பிரயோகம் செய்யப்படுவதிலிருந்து பொதுநலன்களைக் காக்கவேண்டிய பொறுப்பு அவருக்கு உண்டு என்றார் அவர். வழக்கறிஞர்கள் மன்றம் சுதந்திரமாகச் செயல்படுவதை உறுதி செய்வதில் சட்டத்துறைத் தலைவர் டான்ஸ்ரீ முகமட் அபாண்டி, தொழில் பண்பாட்டுடன் செயல்பட வேண்டும் என்று ஓய்வுபெற்ற மேல் முறையீட்டு நீதிபதி முகமட் ஹிசாமுடின் அறிக்கை ஒன்றை விடுத்திருந்தது ரீதியில் கோபால் ஸ்ரீராம் கருத்துரைத்த போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்