அராஜகத்தின் உச்சமாக விளங்கும் சிவப்புச் சட்டை கூட்டத்தினரின் தலைவர் ஜமால் முகமட் யூனுஸை உடனடியாக கைது செய்து அவர் மீது விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று 32 அரசு சாரா அமைப்புகள் நேற்று தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்காரை கேட்டுக் கொண்டுள் ளன. நாட்டில் வன்முறையை தூண்டும் வகையில் ஜமால் முகமட் யூனுசின் செயல்பாடுகள் அமைந்து வருவதாக அவை குற்றஞ்சாட்டின. கடந்த வாரம், பெர்சே 5 வாகன அணி வகுப்பை பின்தொடர்ந்து அதில் பங்கேற்றவர்களுக்கு தொல்லை கொடுத்து, கிரிமினல் அச்சுறுத்தல் கொடுத்ததற்காக சுங்கை பெசார் அம்னோ தொகுதித் தலைவருமான ஜமால் உடனடியாக கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும் என்று அந்த என்ஜிஓக்கள் கூறின. தெலுக் இந்தான் பெர்சே 5 இல் பங்கேற்றவர்களில் சிலர் தாக்கப்பட்டு காயமடைந்துள்ளனர். ஜமால் மற்றும் அவருடைய கூட்டத்தினரின் வன்முறைகளை வன்மையாகக் கண்டிப்பதாக என்ஜிஓக்கள் கூறின. சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களைப் போல் அவர்கள் நடந்து கொண்டனர். போலீசாராலும் அவர்களை ஒன்றும் செய்ய முடியாமல் இருந்தது. ஜமாலை கைது செய்து குற்றம் சாட்டாமல் இருப்பது மலேசியா சட்ட ஆளுமையால் ஆளப்படவில்லை, மாறாக, குண்டர்களால் ஆளப்படுகிறது என்ற தவறான தோற்றத்தை மக்களிடையே ஏற்படுத்தும் என்று என்ஜிஓக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. அதேவேளையில் ஜமாலின் இந்நடவடிக்கைக்கு போலீஸ் துறை துணை போகிறதா? என்ற சந்தேகமும் வலுத்து வருவதாக அவை குற்றஞ்சாட்டின.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்