img
img

கம்போங் சுங்கையூ நிலம் அபகரிப்பு
புதன் 05 அக்டோபர் 2016 13:24:58

img

தஞ்சோங் காராங், கம்போங் சுங்கையூ பசுமைப் புரட்சி விவசாயத் திட்டத்தில் தங் களுடைய வீட்டுமனைகள் அபகரிக்கப் பட்டுள்ள தாக அதன் குடி யேற்றவாசிகள் கொந்தளித்தனர். கோலசிலாங்கூர் மாவட்டத்தில் உள்ள இந்த அரை நூற்றாண்டு விவசாயத் திட்டத்தில் இந்தியர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான வாய்ப்புகள் தட்டிப் பறிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டினர். திங்கட்கிழமை அத்திட்டத்தில் பங்கெடுத்த 20க்கும் மேற்பட்ட இந்திய விவசாயிகள் தங்களுடைய மனக் குமுறலை கொட்டித் தீர்த்தனர். முப்பது ஆண்டுகளுக்கு முன் சதுப்பு நிலக்காடுகளை அழித்து அந்நிலத்தை பண்படுத்தி பாதுகாத்தவர்களுக்கு வீட்டுமனை லோட் நிலம் முற்றாக மறுக்கப் பட்டுள்ளது. அவர்களுக்கு கிடைக்க வேண்டிய வீட்டுமனை லோட் நிலங்கள் வெளியார்களுக்கு தாரை வார்க்கப் பட்டுள்ளதாக மணியம் சின்னப்பையன் (வயது67) ஆவேசப் பட்டார். சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ், கம்போங் சுங்கையூ விவசாயத் திட்டத்தில் பங்கெடுத்த இந்தியர்களின் வரலாறு தெரிய வேண்டுமானால் இங்கு நேரடியாக வந்து அவர்களுடைய வீட்டின் கதவைத் தட்டி வரலாற்றை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைவுறுத்திய மணியம், இங்குள்ள யாரோ ஒருவர் கொடுத்த விவரங்களை முழுமையாக ஆராய்ந்து பார்க்காமல் பேசுவதும் பத்திரிகை அறிக்கை வெளியிடுவதும் அவருடைய அறியாமையை காட்டுகிறது என்று மணியம் மேலும் கூறினார். முப்பது ஆண்டுகளுக்கு முன்பே நானும் என்னுடைய மனைவியும் சதுப்பு நிலக்காடுகள் மண்டிக் கிடந்த சம்பந்தப்பட்ட நிலத்தை அழித்து பண்படுத்தி காய்கறி தோட்டம் அமைத்த வரலாற்றையும் கணபதிராவ் தெரிந்து கொண்டு பேச வேண்டும். ஆனால் எங்களை நேரடியாக சந்திப்பதற்கு அவருக்கு நேரமில்லை என்று மணியம் சீறிப் பாய்ந்தார். வீட்டுமனைக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தில் மண்டிக் கிடந்த புதரையும் சதுப்புக் காடுகளையும் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் நாங்கள் சுயமாக அழித்து அந்த நிலத்தை பண்படுத்தி வந்திருக்கிறோம். அதில் கட்டப்பட்ட பொது மண்டபம் பாழடைந்து கிடக்கிறது. விளையாட்டுத் திடல் தனிநபர் ஒருவரால் அத்துமீறப் பட்டு அதில் செம்பனைக் கன்றுகள் பயிரிடப் பட்டுள்ளன. இதற்கு கோலசிலாங்கூர் மாவட்ட நில அலுவலகம் துணை போனதா? இதை கேள்வி கேட்க கணபதிராவிற்கு துணிவிருக்கிறதா என்று பாஸ்கரன் வேலாயுதம் (வயது53) சவால் விடுத்தார். கணபதிராவ் கூறும் நபர் அந்நிலத்தை பாதுகாக்காமல் இருந்திருந்தால் அது எந்த இந்தியர்களுக்கும் கிடைக்காமல் போய் இருக்கும் என்று அவர் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது என்று குறிப்பிட்ட ஐயாதுரை மாரி (வயது 62), இந்த நிலத்தை அபகரிக்க திட்டமிட்ட வர்கள் யார் என்பதை கணபதிராவால் கூற முடியுமா என்று கேள்வி எழுப்பினார். 1967ஆம் ஆண்டு அப்போது பெக்கான் கோலசிலாங்கூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த டான்ஸ்ரீ என்.எஸ்.மணியம், தஞ்சோங் காராங் தொகுதி அம்னோ ஒத்துழைப்புடன் கம்போங் சுங்கை யூ விவசாய நிலத் திட்டத்தில் இந்தியர்களுக்கு பெருமளவு வாய்ப்பு வழங்கினார். பின்னாளில் வந்த மஇகா பொறுப்பாளர்கள் இந்த வீட்டுமனை நிலத்தை அபகரிக்கத் திட்டம் போட்டதை கணபதிராவால் விவரிக்க முடியுமா? என ஐயா துரைமாரி கேள்வி எழுப்பினார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img