முதல் முறை வீடு வாங்குவோர் அதற்கான நிதித் தேவையை சமாளிக்கும் வகையில் அவர்களின் ஊழியர் சேமநிதி (இபிஎப்) சேமிப்பிலிருந்து பணம் பெறுவது ஒரு நல்ல ஆலோசனைதான். எனினும் அதன் விவரங்கள் ஆராயப்பட வேண்டும் என இரண்டாவது நிதியமைச்சர் டத்தோ ஜொஹாரி அப்துல் கனி கூறியுள்ளார். இபிஎப் கணக்கு 2இன் நிதியளவை 30 விழுக்காட்டிலிருந்து 40 விழுக்காட்டிற்கு உயர்த்தும் ஆலோசனைகள் மீதான கலந்தாலோசனைகள் நடைபெற்று வருகின்றன. இபிஎப் சேமிப்பிலிருந்து பெறப்படும் தொகை வீடு வாங்குவோரின் சக்திக்கு உட்பட்ட வீடுகளுக்கானது மட்டுமே என்பதை உறுதி செய்ய அரசாங்கம் விரும்புகிறது. அத்துடன் யூனிட்டிரஸ்டுகள் போல வீடு வாங்க இபிஎப்பிலிருந்து பணம் பெற்றவர்கள் அடுத்து ஏதேனும் விற்பனை நடவடிக்கையின் மூலம் வரும் தொகையை மீண்டும் இபிஎப்பில் செலுத்த வேண்டும் என்றார் அமைச்சர். அவ்வாறு முதல் முறை வீடு வாங்குவோர் கோரும் நிதியுதவி அளவு முழுவதுமாக அதிகரிக்கப்பட மாட்டாது. ஒரு குறிப்பிட்ட விழுக்காட்டளவு குறித்தும் முதல் முறை வீடு வாங்குவோருக்கான தவணைத் தொகைகளை செலுத்த உதவும் வகையில் பகுதியளவு பணத்தை இபிஎப் எப்படி அனுமதிக்க முடியும் என்பதையும் அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது என்றார் அமைச்சர்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்