img
img

மலாய்க்காரர்கள் இடையே பிளவு!
வெள்ளி 30 செப்டம்பர் 2016 18:10:26

img

மலாய்க்காரர்கள் அரசியலில் பிளவுபட்டிருப்பது ஜ.செ.க. அரசியல் அரங்கில் கொடிகட்டி பறக்க வழிகோலும் என்று கூறப்படுவது குறித்து கருத்துரைத்த அம்னோ மூத்த தலைவர் துங்கு ரசாலி ஹம்சா, இப்போது ஐந்து மலாய் அரசியல் கட்சிகள் இருப்பது அப்படிப்பட்ட எண்ணத்தைத் தோற்றுவித்திருப்பதாகக் கூறினார். இப்படிப்பட்ட நிலைமையில் அடுத்த பொதுத் தேர்தலில் ஆதிக்கம் செலுத்துவதும் நம்மை வெற்றி கொள்வதும் ஜ.செ.க.வுக்கு எளிதாக இருக்கும் என்று நினைக்கத் தோன்றும் என்றார். அது அவ்வளவு எளிதல்ல. ஆனால், சிலர் அப்படி நினைப்பது இயல்புதான். சினார் ஹரியான் நாளேட்டுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் தெங்கு ரசாலி அவ்வாறு கூறினார். கிளந்தான் இளவரசரும் அம்னோ மூத்த தலைவருமான அவரிடம், மலாய்க்காரர் மேன்மைக்காக அம்னோவையும் பாஸையும் ஒன்றிணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டுமா? என்று வினவப்பட்டது. முன்பு மலாய்க்காரர் அரசியல் ஆதரவை அம்னோ, பாஸ், மலாய்க்காரர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பிகேஆர் மூன்றும் பகிர்ந்து கொண்டிருந்தன. இப்போது அவர்களின் ஆதரவுக்காக மேலும் இரு கட்சிகள் போராடுகின்றன. ஒன்று பாஸிலிருந்து பிரிந்து சென்றவர்களால் அமைக்கப்பட்ட பார்ட்டி அமானா நெகாரா(அமானா). இன்னொன்று அம்னோவிலிருந்து பிரிந்து சென்ற பார்ட்டி பிரிபூமி பெர்சத்து மலேசியா(பெர்சத்து). இத்தகைய பிளவை அடுத்து அம்னோவும் பாஸும் நெருங்கி உறவாடுவதைப் பார்க்கிறோம். கட்சித் தலைவர்கள் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கும், அப்துல் ஹாடி ஆவாங்கும் ஒரே மேடையைக் கூட பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், குவாங் மூசா நாடாளுமன்ற உறுப்பினருமான துங்கு ரசாலி ஹம்சா, அம்னோ அடிநிலை உறுப்பினர்கள் அம்னோ- பாஸ் இணைப்பை எதிர்க்கிறார்கள் என்றார். அடிநிலை உறுப்பினர்கள் பாஸுடன் இணைவதை விரும்பவில்லை என்பதால் அடுத்த பொதுத் தேர்தலில் பாஸை எதிர்க்கத்தான் வேண்டியிருக்கும். பாஸில் உள்ளவர்களின் நினைப்பும் அதுதான். அவர்களும் அம்னோவுடன் சேர்வதை விரும்பவில்லை என்றார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img