கடந்த செப்டம்பர் 21ஆம் தேதி உலுத்திராம் புத்ரி வங்சாவில் உள்ள வீடொன் றில் தாயையும் மகளையும் கொலை செய்ததாக 20 வயதுடைய இரு இந்திய இளைஞர்கள் மீது நேற்று ஜொகூர் பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. செப்டம்பர் 21ஆம் தேதியன்று காலை 10.00 மணிக்கும் 11.00 மணிக்கும் இடையில் எம்.மாரியாய் (வயது 56) மற்றும் அவரின் மகள் சி.துர்காதேவி (வயது 17) ஆகியோரை கொடூரமாக கொலை செய்ததாக என்.யுனேஸ்வரன் மற்றும் ஆர்.சுப்பிரமணியம் ஆகியோர் மீது குற்றவியல் பிரிவு 302இன் கீழ் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. கொலைக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் இருவருக்கும் கட்டாய தூக்குத் தண்டனை விதிக்க சட்டம் வகை செய்கின்றது. இந்த இரட்டைக் கொலை தொடர்பில் விசாரணைக்காக தடுக்கப்பட்ட மேலும் அறுவர் இந்த கொலை வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்ட இருவரிடமும் வாக்கு மூலம் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. அதே வேளை பிணையில் விடுவிக்கவும் அனுமதிக்கப்படவில்லை. மரணமடைந்த இருவரின் சவப்பரிசோதனை அறிக்கையை பெறும் வகையில் இவ்வழக்கை மீண்டும் நவம்பர் முதல் தேதி செவிமெடுக்க மாஜிஸ்திரேட் சலினா ஒமார் தேதியை நிர்ணயித்தார். இவ்வழக்கில் அரசாங்க தரப்பில் துணை பொது பிராசிகியூஷன் அதிகாரியாக நூர் பைடூரி முஸ்தாக்கிம் செயல்பட்ட வேளையில் குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கும் வழக்கறிஞர் எவரும் பிரதிநிதிக்கவில்லை. முன்னதாக சம்பவம் நிகழ்ந்த அன்று தாயும் மகளும் உடலில் பல்வேறு இடங்களில் வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடக்க காணப்பட்டனர். அறையொன்றில் தாயார் படுக்கை மெத்தையிலும் மகள் மெத்தைக்கு அருகில் தரையில் இரத்த வெள்ளத்துடன் இறந்து கிடந்தனர். கொலையுண்ட எம்.மாரியாயியின் இரண்டாவது மகன் எஸ்.பிரபாகரன் (வயது 33) அந்த இரட்டைக் கொலைகளை முதலில் கண்டு போலீசுக்கு தகவல் வழங்கியுள்ளார். மூன்று அறைகள் கொண்ட அந்த வீட்டின் மூன்றாவது அறையில் இருவரும் இறந்து கிடந்தனர். எம்.மாரியாயின் இடது விலா எழும்பு, கழுத்து மற்றும் உடலின் பின் பகுதியில் வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடந்த வேளையில் சி.துர்காதேவியின் உடல், கழுத்து மற்றும் வாய்ப்பகுதியில் வெட்டுக்காயங்களுடன் இறந்து கிடந்ததாக முன்னதாக ஜொகூர்பாரு தென் பகுதி போலீஸ் தலைவர் ஏசிபி சுலைமான் சாலே கூறியிருந்தார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்