வியட்நாமில் இம்மாதம் தொடக்கம் நடைபெற்ற ஆறாவது ஆசிய யோகா விளையாட்டு சாம்பியன்ஷிப் போட்டியில் நாட்டிற்கு பெருமை சேர்த்த இளம் வீரர்களுக்கு அரசாங்கமும், இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சும் உரிய அங்கீகாரம் வழங்கத் தவறியிருப்பது மலேசிய நண்பனின் கவனத்திற்கு கொண்டு வரப்பட் டுள்ளது. வியட்நாம், ஹனோயில் இம்மாதம் 3-ஆம் தேதி முதல் 5-ஆம் தேதி வரை நடைபெற்ற அப்போட்டிகளில், 12 நாடுகளுக்கு மத்தியில் மலேசியா 3-ஆவது இடத்தை பெற்றது மட்டுமின்றி மலேசியாவை பிரதிநிதித்து பங்கேற்ற போட்டியாளர்களில் எழுவர் தங்கமும், இருவர் வெள்ளியும், எழுவர் வெண்கலப் பதக்கங்களையும் வென்றனர். மலேசிய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டு, லைசென்ஸ் வழங்கப்பட்ட மலேசிய யோகா விளையாட்டு சங்கத்தின் (எம்.ஒய்.எஸ்.ஏ.) மூலமாக இவ்விளையாட்டாளர்கள் போட்டிகளில் பங்கேற்றனர். சித்தி ஹமிடா பிந்தி அப்துல் அஜிஸ் என்ற ஒரு மலாய் மாணவியும் தங்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மலேசியாவில் அமோக வரவேற்பு நல்கப்பட்டதுடன், வெகுமதிகளும் குவிந்தன. இதற்கு நாங்கள் ஆட்சேபம் ஏதும் தெரிவிக்கவில்லை. ஆனால், யோகா போட்டிகளில் பங்கேற்ற இளம் விளையாட்டாளர்களும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றே தாங்கள் கோருவதாக மலேசிய மக்கள் நலன் மன்றம் குரல் எழுப்பியுள்ளது. யோகா கலையில் சிறந்து விளங்குவோருக்கு அரசாங்கம் தக்க அங்கீகாரத்தையும், ஊக்குவிப்பையும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்திய அவ்வியக்கத்தினர், இவ்விஷயத்தில் குறிப்பாக, இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சு அலட்சியமாக இருந்து வருவது ஏமாற்றத்தை தருவதாக குறிப்பிட்டனர். பூப்பந்து விளையாட்டு வீரர் டத்தோ லீ சோங் வேய் போன்ற விளையாட்டாளர்களுக்கு அரசாங்கம் வெகுமதி வழங்கியது போக, சீனர் சமூகத்தின் சார்பில் தனிப்பட்ட சலுகைகளும், ஊக்குவிப்பும் அவருக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால், யோக கலையில் உலகளாவிய நிலையில் சாதனை படைத்த, குறிப்பாக தமிழ்ப்பள்ளிக்கூட மாணவர்களை அரசாங்கம் கவனிக்கவில்லை என்பது ஒரு புறமிருக்கட்டும், ம.இ.கா. கூட பாராமுகம் காட்டி வருவது வேதனை தரும் விஷயமாகும். அதிலும், ம.இ.கா.வை பிரதிநிதிக்கும் ஒருவர், இளைஞர் விளையாட்டுத் துறை துணை அமைச்சராக இருக்கும் பட்சத்தில் இந்த இளம் வெற்றியாளர்கள் புறக்கணிக்கப்படுவது அவர்களின் பாரபட்ச போக்கையே பிரதிபலிப்பதாக கூறப்படுகிறது. விளையாட்டாளர்களுக்கு அங்கீகாரம் என்பது உலக ரீதியில் நாட்டிற்கு பெருமை தேடித் தந்த வீரர்களுக்கு வழங்கப்படும் சன்மானமாகும். அதிலும் அரசாங்கத்தின் வெகுமதியாக இருந்தால் அதன் மதிப்பே தனிதான். அதைத்தான் இந்த யோகா போட்டி விளையாட்டாளர்களுக்கும் கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கிறோம் என்று சம்பந்தப்பட்ட விளையாட்டு வீரர்களின் பெற்றோரும் தங்கள் எண்ணத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்