திங்கள் 09, டிசம்பர் 2019  
img
img

விருது பெற்றார் தமிழ்ப்பள்ளி மாணவி ஜெயராணி
சனி 28 ஏப்ரல் 2018 16:57:19

img

ஜொகூர் பாரு, 

தமிழ்ப்பள்ளி மாணவர் கள் புது எல்லைகளில் சாதனை படைக்க முடியும் என்பதை நிரூபிக்கின்றார் ஜொகூர், உலுத்திராம், தாமான் புத்ரி வாங்சாவை சேர்ந்த 23-வயதுடைய  டி.ஜெயராணி.தேசிய ரீதியிலான சிறிய, நடுத்தர வர்த்தக விருது விழா கடந்த 22.04.2018-இல் நடைபெற்றது. இம்மாபெரும் விருதளிப்பு விழாவில் கௌரவிக்கப்பட்ட ஜெயராணி தமது தாயார் ஜெயந்திக்கு மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

உலுத்திராம் தமிழ்ப்பள்ளி மாணவியான ஜெயராணி யு.பி.எஸ்.ஆர்.தேர்விலும் பிறகு எஸ்.பி.எம்.தேர்விலும் 7-ஏ பெற்றுள்ளார். கல்வியில் சிறந்து விளங்கும் இவர் எஸ்.பி.எம்.தேர்வுக்குப் பிறகு விளையாட்டு பயிற்சிகளில் மும்முரம் காட்டினார். தீவிர பயிற்சியில் ஈடுபட்டு 2010 / 2011  ஆம் ஆண்டு களில் தேசிய ஓட்டக்காரராக பரிணமித்தார். உலுத்திராம் வட்டாரத்தில் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் நடன பயிற்சி மையத்தை முழு நேரமாக நடத்தி வரும் இவரிடம் 100-க்கும் மேற்பட்டவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர்.  

ஜெயராணியின் தாயார் திருமதி ஜெயந்தி 1990ஆம் ஆண்டில் 1,500 மீட்டர் ஓட்டத்தில் சுக்மா போட்டி களில் தங்க விருது பெற்ற முதல் இந்தி யப்பெண்மணி என்பது குறிப்பிடத்தக்கது. ஜொகூர் மாநிலத்தில் விளையாட்டுப்பயிற்சிகள் வழங்குவதற்கான அனைத் துலக சங்கத்தின் சான்றிதழ் பெற்றுள்ள ஒருவராகவும் ஜெயந்தி தற்போது தமது கிளப் ஓலாராகா சூப்பர் ஸ்டார் அமைப்பின் மூலம் சுக்மா தேசிய போட்டிகளுக்கு இந்திய மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகின்றார்.

தமிழ்ப்பள்ளியில் கல்வி பயின்ற திருமதி ஜெயந்தியும் அவரின் மகள் ஜெயராணியும்  தமிழ்ப்பள்ளி மாணவர் களுக்கு பெரும் ஊக்கத்தை கொடுத்து சேவையாற்றி வருகின்றனர்.

பின்செல்

மாணவர் செய்திகள்

img
தங்கள் பிள்ளைகளை தமிழ்ப்பள்ளியில் இணைத்து வாழ்க்கையில் உயரவைத்த தமிழ் உணர்வாளர் ந.பச்சைபாலன்-ரே.கமலாதேவி தம்பதியர்.

தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு.

மேலும்
img
எங்கள் 3 பிள்ளைகளின் எதிர்காலத்தையும் செழிப்பாக்கிய தமிழ்ப்பள்ளி.

தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு.

மேலும்
img
தாமான் சீ தேசிய இடைநிலைப் பள்ளியின் ஓட்டப்போட்டி. நிதி திரட்டும் நிகழ்ச்சி.

பள்ளியின் மண்டபம் மற்றும் இதர பகுதிகளின்

மேலும்
img
லூனாஸ் வெல்லெஸ்ஸி தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கனடாவில் தங்கத்தை குவித்தனர்

கூலிம் மாவட்ட கல்வி இலாகாவின் துணையுடன்

மேலும்
img
உயர்  கல்விக்கூடங்களுக்கு இடையிலான அரச விருதிற்கான  பேச்சுப் போட்டியில் சிறந்த போட்டியாளராக பவித்ரா.

மிகத் திறமையாக பேசிய இந்திய மாணவியான பவித்ரா

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img