வியாழன் 12, டிசம்பர் 2019  
img
img

பூலோ ஆக்கார் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அனைத்துலக சாதனை
புதன் 18 ஏப்ரல் 2018 12:22:50

img

(ப.சந்திரசேகர்)

ஈப்போ, ஏப். 18-  அனைத்துலகப் பொறியியல் ஆக்க மும் புத்தாக்கமும் கண்காட்சி 2018 (International Engineering Invention &  Innovation Exhibition) எனும் போட்டியில் கலந்து கொண்டு பூலோ ஆக்கார் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் இந்த முறை வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளனர்.சோழ உமி, கரும்புச் சக்கை, வாழைத்தண்டு முதலான தாவ ரங்களைக் கொண்டு பசுமைக் காகிதத்தை உருவாக்கி இந்தக் குழுவினர் மாபெரும் சாத னையை புரிந்துள்ளனர்.

பூலோ ஆக்கார் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த அஜய் ராவ் சந்திரன், குகன்ராஜ் கிருஷ்ணகுமார், சூரியமூர்த்தி சிவம் ஆகிய மூவரே இந்த மாபெரும் சாதனைக் குரிய மாணவர்களாவர். உலக அளவிலான வெற்றியை நோக்கி இந்த மாணவர்களைப் பயிற்றுவித்து வழிநடத்தியவர்கள் ஆசிரியை அனு ராதா முருகேசன், ஆசிரியை நிர்மலா முருகேசன் ஆகிய இருவர்.

மலேசியப் பெர்லிஸ் பல்க லைக்கழகத்தில் (Universiti Malaysia Perlis) கடந்த ஏப்ரல் 13 -15 வரை இந்த அனைத்துலகப் போட்டி நடைபெற்றது. மொத்தம் 410 குழுக்கள் இதில் பங்கு பெற்றன.மலேசியாவைத் தவிர்த்து அமெரிக்கா, இந்தியா, ரோமானியா, தென் கொரியா, சீனா, வியட்நாம், லாவோஸ், இந்தோனேசியா, தாய்லாந்து, கம்போடியா முதலான 18 நாடு களைச் சேர்ந்த போட்டியாளர்கள் இப்போட்டியில் கலந்து கொண் டனர். அனைத்துக் குழுக்களும் தங்களின் புத்தாக்கக் கண்டு பிடிப்பு களைக் காட்சிக்கு வைத்தனர்.

தொடக்கப் பள்ளி மாணவர்கள் முதற்கொண்டு பல்கலைக்கழக மாணவர்கள் வரையில் பங்கேற்ற இப்போட்டியில் பேரா மாநிலத்தி லிருந்து கலந்துகொண்ட ஒரே பள்ளி பூலோ ஆக்கார் தமிழ்ப் பள்ளி மட்டும்தான். அதேபோல, கெடா மாநிலத்திலிருந்து சுங்கை ஊலார் தமிழ்ப் பள்ளியும் இதில் பங்கெடுத்தது.

பூலோ ஆக்கார் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் புத்தாக்கக் கண்டுபிடிப்புக்கு வெள்ளிப் பதக்கம் வழங்கிச் சிறப்பிக்கப் பட்டது. இந்தச் சாதனையை அறிந்த பேரா மாநிலக் கல்வி இயக்குனர் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார். மேலும், நடுபேரா மாவட்டத் கல்வித் துணையதிகாரி பூலோ ஆக்கார் தமிழ்ப்பள்ளிக்கு நேரடியாக வருகை மேற்கொண்டு சாதனை மாணவர்களுக்கும் ஆசிரியர் களுக்கும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தார். 

பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளி களின் அமைப்பாளர் சுப.சற்குணன் தமது வாழ்த்துகளைப் பள்ளித் தலைமையாசிரியரிடம் தெரிவித்தார்.

 

பின்செல்

மாணவர் செய்திகள்

img
தங்கள் பிள்ளைகளை தமிழ்ப்பள்ளியில் இணைத்து வாழ்க்கையில் உயரவைத்த தமிழ் உணர்வாளர் ந.பச்சைபாலன்-ரே.கமலாதேவி தம்பதியர்.

தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு.

மேலும்
img
எங்கள் 3 பிள்ளைகளின் எதிர்காலத்தையும் செழிப்பாக்கிய தமிழ்ப்பள்ளி.

தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு.

மேலும்
img
தாமான் சீ தேசிய இடைநிலைப் பள்ளியின் ஓட்டப்போட்டி. நிதி திரட்டும் நிகழ்ச்சி.

பள்ளியின் மண்டபம் மற்றும் இதர பகுதிகளின்

மேலும்
img
லூனாஸ் வெல்லெஸ்ஸி தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கனடாவில் தங்கத்தை குவித்தனர்

கூலிம் மாவட்ட கல்வி இலாகாவின் துணையுடன்

மேலும்
img
உயர்  கல்விக்கூடங்களுக்கு இடையிலான அரச விருதிற்கான  பேச்சுப் போட்டியில் சிறந்த போட்டியாளராக பவித்ரா.

மிகத் திறமையாக பேசிய இந்திய மாணவியான பவித்ரா

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img