ஆறு ஆண்டுகளுக்கு முன்பு திடீர் மரணம் அடைந்த டாக்டர் செபஸ்டியன் மரணத்திற்கான காரணம் இன்னும் முழுமையாக கண்டறியப்படாததால் அவரின் குடும்பத்தினர் மிகுந்த குழப்பத்திலும் ஆத்திரத்திலும் உள்ளனர். லங்காவி அரசாங்க கிளினிக்கில் பணியாற்றி வந்த டாக்டர் செபஸ்டியன் கடந்த 2010 நவம்பர் 1 ஆம் தேதி தன் குடியிருப்பில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அப்போது அவருக்கு வயது 30. அவரின் மரணத்தை கண்டறிய லங்காவி மருத்துவமனையில் சவப்பரிசோதனை நடத்தப்பட்டது. ஆனால், சவப்பரிசோதனை நடத்திய பொறுப்பதிகாரி, செபஸ்டியனின் மரணத்திற்கான காரணத்தை துல்லியமாக உறுதிப்படுத்த முடியவில்லை என்று குறிப்பிட்டு இருந்தார். டாக்டர் செபஸ்டியனின் உடலில் இரண்டாவது சவப்பரிசோதனை நடத்துவதற்கு சட்ட நடவடிக்கை மேற்கொள்ள அவரின் குடும்பத்தினர் மேலும் 5 ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய துரதிர்ஷ்டம் ஏற்பட்டது. இறுதியாக கடந்த 2015 மார்ச் 17 ஆம் தேதி செபஸ்டியனின் உடலில் சவப்பரிசோதனை நடத்தப்பட்ட போது, லங்காவியில் மேற்கொள்ளப்பட்ட முதலாவது சவப்பரிசோதனை சொதப்பலில் முடிந்தது என்பது உறுதிப்பட்ட போது அவரின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்ததுடன் மேலும் கவலையுற்றனர். இந்த இரண்டவாது சவப்பரிசோதனையை மலாயா பல்கலைக்கழக சவப்பரிசோதனை நிபுணர் டாக்டர் காசிநாதன் நடேசனும் ஆஸ்திரேலிய சவப்பரிசோதனை ஆலோசனை நிபுணர் டாக்டர் ரிச்சர்ட் பிரோன் கொலின்ஸூம் மேற்கொண்டனர். முதலாவது சவப்பரிசோதனையில் குறைந்த நடைமுறை தரம் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது என்று அவர்கள் குறிப்பிட்டனர். மரணத்திற்கான காரணத்தை கண்டறிவதற்கு இருதயம், இதர உடல் உறுப்புகள் நிறைய உள்ளன. ஆனால், அவற்றை ஆராய்ந்து பார்க்காமல் சவப்பரிசோதனை முழுமையாக இல்லாமல் சொதப்பி இருக்கின்றனர். இதன் காரணமாக இரண்டாவது சவப்பரிசோதனையின் போது மரணத்திற்கான காரணத்தை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அத்துடன் வயது காலமும் மாறுபட்டுள்ளது. என்னுடைய 40 ஆண்டு கால உடல்கூறு தடயவியல் அனுபவத்தில் அப்படியொரு தரம் குறைந்த நடைமுறையில் சவப்பரிசோதனை நடத்தப்பட்டதை பார்த்ததில்லை என்று கொலின்ஸ் தெரிவித்துள்ளார். செபஸ்டீயனின் மரணத்திற்கு மாரடைப்பு ஒரு காரணமாக இருக்கக்கூடும் என்று இரண்டாவது சவப்பரிசோதனையை செய்த அந்த இரண்டு மருத்துவர்களும் நம்புகின்றனர். ஆனால் மலேசியாவிலும் ஆஸ்திரேலியாவிலும் மேற்கொள்ளப்படும் மாறுப்பட்ட சவப்பரிசோதனை முறையின் வாயிலாக மரணத்திற்கான காரணத்தின் முடிவும் மாறுபடக்கூடிய சாத்தியம் இருப்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். விக்டோரியா நச்சுயியல் தடயவியல் இலாகாவின் முடிவின்படி உடலில் செயற்கை ரசாயனம் கலந்து இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இறந்தவரின் உடலில் இது எப்படி நுழைந்துள்ளது என்பது ஆராயப்பட வேண்டியுள்ளது. இது சந்தேகத்திற்கும் இடம் அளிக்கும் மரணமாகும். எனவே இது குறித்து ஆராயப்பட வேண்டிய அவசியம் இருக்கிறது என்று கொலின்ஸ் தன் முடிவை அறிவித்துள்ளார். இது தொடர்பான விசாரணை துரிதப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். கடந்த 2015 ஜனவரி 7 ஆம் தேதி அலோர்ஸ்டார் உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவின்படி செபஸ்டியனின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு மறுபடியும் இரண்டாவது சவப்பரிசோதனை நடத்தப்பட வேண்டும். அதன்படி இரண்டாவது சவப்பரிசோதனையும் முடிந்து விட்டது. அடுத்து மரண விசாரணை நடத்தப்படுவதற்கான சட்டப் போராட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் அவரின் குடும்பத்தினர் இருக்கின்றனர். அதற்கு பெரியளவில் நிதி சுமையை அவரின் குடும்பத்தினர் ஏற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்