உலகம் முழுவதும் சுமார் 35 கோடிக்கும் அதிகமானோர் மன அழுத்தப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளனர். அப்பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணப்படாவிட்டால் அதனால் பாதிக்கப்பட்டவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு மோசமான முடிவை எடுக்கக் கூடும். பதினைந்து வயதிலிருந்து 29 வயதுக்கு உட்பட்டவர்களை உட்படுத்திய உயிரிழப்புக்கு இரண்டாவது மிக முக்கிய காரணமாக தற்கொலை விளங்குகிறது என ஆய்வுகள் கூறுகின்றன. அனைத்துலக ரீதியில் உயிரிழப்புக்கான 4 ஆவது மிக முக்கியக் காரணமாக தற்கொலை விளங்குகிறது என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. 2020 ஆம் ஆண்டில் அது இரண்டாவது மிகப் பெரிய காரணமாக உருவெடுக்கக் கூடும் எனவும் எச்சரித்துள்ளது. மலேசியாவில் ஆண்களைக் காட்டிலும் பெண்களே அதிக மன அழுத்தப் பிரச்சினைக்கு ஆளாவதாக கண்டறியப்பட்டிருக்கிறது. ஆண்களைக் காட்டிலும் இருமடங்கு அதிகமான பெண்கள் இப்பிரச்சினையை எதிர்நோக்குகின்றனர். நாட்டிலுள்ள பல இன மக்களிடையே, மலாய்க்காரர்கள் மத்தியில் தற்கொலை முயற்சிகளும் சம்பவங்களும் மிகக் குறைவாக பதிவாகியிருப்பதாக புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. தற்கொலைக்கும் மன அழுத்தப் பிரச்சினைகளுக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருப்பதாக உளவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மலேசியாவில் மேற்கொள்ளப்பட்ட சில ஆய்வுகளின் அடிப்படையில், பெண்கள் குறிப்பாக இந்தியப் பெண்கள் மன உளைச்சலுக்கு அதிகம் ஆளாவதாக கண்டறியப்பட்டிருக்கிறது. மன உளைச்சலினால் பாதிக்கப்படும் இந்தியப் பெண்கள் மேலும் பல நோய்களின் தாக்கத்திற்கு ஆளாவதாகவும் மலேசிய மன ஆரோக்கிய அமைப்பின் துணைத் தலைவர் டத்தோ டாக்டர் அண்ட்ரூ மோகன்ராஜ் சந்திரசேகரன் கூறுகிறார். இந்தியப் பெண்களின் வாழ்க்கை முறை இதற்கு முக்கியக் காரணமாக இருக்கலாம் என அவர் குறிப்பிட்டார். சமூகவியல் நடவடிக்கைகளில் ஈடுபடாமல், குடும்பத்திற்கும் வேலை செய்வதற்கும் மட்டுமே நேரத்தை செலவிடுவது மன அழுத்தப் பிரச்சினைக்கான அடிப்படை காரணமாக அமையலாம் என அவர் சொன்னார். மேலும், மன உளைச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவர்களின் ஆலோசனையை நாட வேண்டிய அவசியம் குறித்து உணராமல் இருப்பது, அலட்சியம், நிதி பற்றாக்குறை உள்ளிட்டவையும் அதிகமான இந்தியப் பெண்கள் இப்பிரச்சினையை எதிர்நோக்கக் காரணமாக அமைந்துள்ளது. நவீன தொழில்நுட்ப யுகத்தில், தொலைத்தொடர்பு சாதனங்கள் பரிணாம வளர்ச்சி கண்டிருக்கும் நிலையில், இதர மக்களுடனான தொடர்பு முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளது. பலர் குறிப்பாக நகர்களில் வசிப்பவர்கள், அவர்களின் அண்டை அயலாரைக் கூட அறிந்திருப்பதில்லை. பரபரப்பான வேலை சூழலுக்குப் பின் குடும்பத்துடனோ நண்பர்களுடனோ அல்லது அண்டை வீட்டாருடனோ சகஜமாக பேசிப்பழக பலருக்கு நேரம் இருப்பதில்லை. மனம் விட்டுப் பேச நம்பிக்கைக்குரியவர்களும் நெருக்கமானவர்களும் எவரும் இல்லாததாலும், உடலுக்கு புத்துணர்ச்சி தரக் கூடிய நடவடிக்கைகளில் ஈடுபடாமல் இருப்பதாலும் அதிகமான இந்தியப் பெண்கள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்படுகின்றனர். மேலும், வேலைக்குச் செல்லாமல் வீட்டு வேலைகளில் முடங்கிக் கிடக்கும் குடும்பப் பெண்கள், தொலைக்காட்சியின் முன் அதிக நேரத்தை செலவிடுவதும் இதற்கு காரணமாக அமையலாம் என அண்ட்ரூ கோடி காட்டியுள்ளார். இந்திய குடும்பங்களின் துயரங்களையும் பெண்களின் சோகங்களையும் பெரும்பாலும் மையமாகக் கொண்டு தயாரிக்கப்படும் தொலைக்காட்சி சீரியல் நாடகங்கள் மன உளைச்சலை ஏற்படுத்த வழிவகுக்கிறது. எந்நேரமும் அழுகையும், மற்றவர்களுக்கு கொடுமை, தீமை, இழைக்கும் கெட்ட எண்ணத்தையும் கொண்ட கதாபாத்திரங்கள், தொலைக்காட்சி நாடகங்களை அதிகம் பார்க்கும் பெண்களின் மனதில் ஆழமாக பதிந்து பாதிப்பை ஏற்படுத்துகின்றன என ஆய்வு முடிவு கூறுகிறது. ஆண்களைக் காட்டிலும் பெண்கள் அதிகமானோர் மன உளைச்சலால் பாதிக்கப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளதை டாக்டர் அண்ட்ரூ சுட்டிக் காட்டினார். அதிலும் குறிப்பாக இந்தியப் பெண்களே உலகில் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகும் தரப்பாக வகைப்படுத்தப்பட்டுள்ளனர். திரைப்படம், நாடகம், சமூக பொருளாதார நெருக்கடி, வாழ்க்கை முறை ஆகியன இந்தியப் பெண்கள் இப்பிரச்சினையை எதிர்நோக்க முக்கிய காரணமாக கண்டறியப்பட்டுள்ளது. மோசமான விளைவுகளை ஏற்படுத்துவதற்கு முன்னதாக இதற்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை மணி அடித்துள்ளது. - தெ மலேசியன் டைம்ஸ்
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்