img
img

திடீர் தேர்தல் இல்லை!
வியாழன் 29 செப்டம்பர் 2016 17:15:25

img

தனது அரசாங்கத்துக்கு அளிக்கப்பட்ட ஆளும் அதிகாரம் 2018 ஆம் ஆண்டுடன் முடிவுக்கு வரும் வரையில் திடீர் தேர்தல் நாட்டில் நடக்கப் போவதில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் அப்துல் ரசாக் தெரிவித்துள்ளார். பெர்லினில் செய்தியாளர் கூட்டத்தில் பேசியபோது நஜீப், எந்தவொரு தனிக் காரணத்துக்காகவும் தேர்தலை முன்கூட்டியே நடத்து வதற்கில்லை என்று நஜீப் குறிப்பிட்டதாக ராய்ட் டர்ஸ் செய்தி கூறுகிறது. ஆனால், ஒரு திடீர் தேர்தல் அடுத்த ஆண்டில் முதல் காலாண்டிலேயே நடக்கலாம் என்பதுதான் இப்போது எங்கு பார்த்தாலும் பேச்சாக உள்ளது. தேர்தலைத் தாமதப்படுத்துவது நஜீப்புக்குத்தான் பாதகமாக அமையும் என்றும் சில ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். அது பிளவுபட்டுக் கிடக்கும் எதிரணியினர் ஒன்றிணையவும் தங்களை வலுப்படுத்தவும் வாய்ப்பாக அமைந்து விடும். மேலும், அது டாக்டர் மகாதீர் முகமட்டும் அவரது பார்டி பிரிபூமி பெர்சத்து மலேசியாவும் அரசியல் அரங்கில் வலுவாகக் காலூன்ற போதுமான அவகாசம் அளிக்கும். எனவே, இன்னும் உறுதிப்படாதிருக்கும் ஒரு அரசியல் சூழலில் எதிரணியில் நிலவும் குழப்ப நிலையைச் சாதகமாக்கிக் கொண்டு பிரதமர் தேர்தலை முன்கூட்டியே நடத்த வேண்டும் என்கிறார்கள் அவர்கள். நஜீப்புக்கு முன்பிருந்தவர்களும் தேர்தல் பற்றி வினவும்போது மறுப்புத் தெரிவிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும். 2008 ஆண்டு பிப்ரவரி 12 இல், அப்போதைய பிரதமர் டத்தோஸ்ரீ அப்துல்லா அகமட் படாவியிடம் நாடாளுமன்றம் அடுத்த 24 மணி நேரத்தில் கலைக்கப்படுமா? என்று வினவியபோது அது வதந்தி என்று நிராகரித்தார். அதற்கடுத்த நாள் நடைபெறவிருந்த அமைச்சரவைக் கூட்டம்தான் தேர்தலுக்கு முந்திய கடைசி கூட்டமா? என்று கேள்வியையும் தள்ளுபடி செய்தார். ஏன் கடைசிக் கூட்டம் என்று நினைக்கிறீர்கள். அமைச்சரவைக் கூட்டம் நடக்கும், நடக்கும், தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும். நீங்கள் அதிபுத்திசாலிகளாயிற்றே வதந்திகளைப் பரப்புங்கள், மனம் மகிழுங்கள் என்றார். மறுநாள், அப்துல்லாவே நாடாளுமன்றம் கலைக்கப்படுவதை அறிவித்தார். அபோது செய்தியாளர்கள் அவரை மடக்கியபோது, தேர்தல் தேதி குறித்து என்னால் எதுவும் சொல்ல முடியாது. அதற்குப் பேரரசர் ஒப்புதல் தேவை என்றார். இப்போது நினைத்துப் பார்த்தால், அப்துல்லா மேலும் சிறிது காலம் பொறுத்து தேர்தலை நடத்தி இருந்தால் நன்றாக இருக்கும் எனத் தோன்றுகிறது. ஏனென்றால் 2008 க்கு பின்னர்தான் அரசியல் களத்தில் எதிர்பாராத எத்தனை மாற்றங்கள். முதல்முறையாக ஆளும் கட்சி நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை இழந்தது. சில மாநிலங்களும் எதிரணியின் கைக்குச் சென்று விட்டன.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img