செவ்வாய் 10, டிசம்பர் 2019  
img
img

`திவாலுக்கு அழைத்துச் செல்லும் பட்ஜெட்' - தலைவர்கள் கருத்து!
வியாழன் 15 மார்ச் 2018 18:53:23

img

2018-19-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையைத் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார். இது குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, தமிழக பட்ஜெட் குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்துகள் தெரிவித்துள்ளனர். அதன்படி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலை வர் திருமாவளவன் கூறியதாவது; "பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. ஏற்கெனவே செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கும் கூடுதல் நிதி ஒதுக்கீடு அவ்வளவாகச் செய்யப்படாதது மட்டுமின்றி பல திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் கடன் சுமார் மூன்றரை லட்சம் கோடி இருப்பதாகவும் இந்த ஆண்டு மேலும் ஒரு லட்சம் கோடிக்கு அதிகமாகப் புதிய கடன் வாங்கப்போவதாகவும் தமிழக அரசு கூறியுள்ளது.

இது மிகவும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. வரி வருவாய்ப் பகிர்வில் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு தொடர்ந்து துரோகம் இழைத்து வருகிறது. இது மத்திய அரசுத் திட்டமிட்ட முறையில் தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது என்பதற்குச் சான்றாகும். இந்த அநீதியை எதிர்த்து வலுவாகக் குரலெழுப்ப வேண்டியது தமி ழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் கடமையாகும். இவை அனைத்தும் தமிழக அரசு நிதி மேலாண்மையில் தோல்வி அடைந்திருப்பதையே காட்டுகிறது. ஒட்டுமொத்தத்தில் `இதுவொரு ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்’ ஆகும்" என்றார். 

பட்ஜெட் குறித்து பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறுகையில், "தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்ல பினாமி அரசால் முடியாது என்பதை இந்த நிதிநிலை அறிக்கை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறது. பா.ம.க-வின் பொது நிதிநிலை அறிக்கையைப் பின்பற்றி, துவரை, உளுந்து, பச்சைப்ப யறு ஆகியவற்றைத் தமிழக அரசு கொள்முதல் செய்யும் என்று அறிவிக்கப்பட்டிருப்பது நல்ல திட்டமாகும். இதைத் தவிர பயனுள்ள அறிவிப்புகள் எது வும் இல்லை. கரும்பு கொள்முதல் விலை நிர்ணய முறை, அத்திக்கடவு - அவினாசித் திட்டம் ஆகியவற்றில் விவசாயிகளுக்குப் பினாமி அரசு பெருந்து ரோகம் செய்திருக்கிறது.

இலக்குகளைவிட குறைவாகச் செலவு செய்வதும் அதிக வருவாய் ஈட்டுவதும்தான் நல்ல அரசுக்கு அடையாளமாகும். ஆனால், தமிழக அரசின் செயல்பா டுகள் தலைகீழாக உள்ளன. தமிழக ஆட்சியாளர்களுக்கு நிர்வாகம் என்றால் என்னவென்றே தெரியாது என்பதைத்தான் இது காட்டுகிறது. 2018-19-ம் ஆண்டில் அரசின் மொத்தக் கடன் ரூ.7 லட்சம் கோடியை எட்டக்கூடும். அதாவது தமிழக மக்கள் ஒவ்வொருவரின் தலையிலும் தலா ரூ.1 லட்சம் கோடி கடனை அரசு சுமத்தியுள்ளது. திவாலை நோக்கியப் பயணத்தில் தமிழகத்தையும் தமிழக மக்களையும் மேலும் சில அடி முன்னோக்கி அழைத்துச் சென்றுள்ளது அரசு. இது மக்கள் மகிழ்ச்சியடைய வேண்டிய சாதனை அல்ல... வெட்கித் தலைகுனிய வேண்டிய வேதனை ஆகும்" என்றார். 

தே.மு.தி.க பொதுச் செயலாளர் விஜயகாந்த் கூறுகையில், "சென்ற நிதி ஆண்டில் அறிவித்த பல திட்டங்கள் இன்னும் நிறைவேற்றப்படாத சூழ்நி லையில், தற்போது பல திட்டங்களுக்குப் பல ஆயிரம் கோடி ஒதுக்கி தமிழக அரசு அறிவித்திருப்பது, ஒரு கண்துடைப்பு நாடகமாகவும், தமிழக மக்களை ஏமாற்றும் செயலாகவுமே உள்ளது. தமிழக நதிகளை இணைப்பதைப் பற்றியோ மழைநீர் சேகரிப்பு, விவசாயம், நெசவுத்தொழில் மேம்பா ட்டிற்கோ மாவட்டம் வாரியாகத் தொழிற்சாலைகள் அமைப்பதற்கோ இளைஞர்களின் வேலைவாய்ப்பு போன்றவற்றுக்கோ என்ற எந்தவொரு வளர்ச்சித் திட்டங்களும் இந்தப் பட்ஜெட் அறிவிப்பில் இல்லாதது பெருத்த ஏமாற்றத்தையும் கவலையையும் தருகிறது. மொத்தத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள இந்த நிதி ஆண்டுக்கான பட்ஜெட் அறிவிப்புகள் “மக்களின் கண்களை மறைத்து மாயவித்தைகளைக் காட்டுகின்றனவோ” என நினைக்கத் தோன்றும் பட்ஜெட்டாகவே தே.மு.தி.க கருதுகிறது" எனத் தெரிவித்துள்ளார். 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
அந்நிய நாட்டுத் தொழிலாளர்களைச் சேர்ப்பதில் அதிகார துஷ்பிரயோகம்,ஊழல், சுரண்டல்! எஸ்.பி.ஆர்.எம். அம்பலம்

நாட்டில் அந்நிய நாட்டுத் தொழிலாளர்களை வேலைக்குச் சேர்ப்பதில் அதிகார

மேலும்
img
விடுதலைப் புலிகள் தொடர்பாக 12 பேர் கைதா? லண்டன் தமிழர்கள் கண்டனக் குரல்!

தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இருந்ததாகச் சந்தேகத்தின் பேரில் 12

மேலும்
img
கெராக்கான் மீதிலான குற்றச்சாட்டு சுத்த அபத்தம்

கெராக்கான் மீது வீசப்படும் குற்றச்சாட்டு சுத்த அபத்தமான ஒன்று என்று

மேலும்
img
செரண்டா தமிழ்ப்பள்ளியில் இன்னும் இழுபறி. கல்வி அமைச்சு மௌனம் சாதிப்பதேன்?

அண்மையில் சர்ச்சையில் இருந்த அந்நிலத்திற்கான நிலப்பட்டாவை மீட்டு

மேலும்
img
102வயதில் அடையாள அட்டை. பூபதியின் கனவு நிறைவேறியது.

1917-இல் தமிழகத்திலிருந்து இங்கு குடி பெயர்ந்த

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img