தனக்கென ஒரு தனிக்கட்சி’ என்பது காலத்தின் கட்டாயம் மட்டும் அல்ல; அரசியல் எதிரிகளை எதிர்க்கவும், அ.தி.மு.க-வில் உள்ளவர்களை மடக்கவும், தங்களை வெளியேற்றிய அ.தி.மு.க-வை முழுமையாக வளைக்கவும், மன்னார்குடி குடும்பத்துக்குள், தனக்கெதிராக நடக்கும் உள்ளடி வேலைகளை முறிக்கவும் தனிகட்சி அவசியம்!” என்ற கணக்கில் இருந்தார் தினகரன். அந்தக் கணக்கின் தீர்வுதான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்!
தமிழகம் எந்த நேரத்தில் எந்தத் தேர்தலைச் சந்திக்கும் என்பது யாருக்கும் புரியாத புதிராக இருக்கிறது. உள்ளாட்சித் தேர்தல் முதலில் வருமா... அல்லது சட்டமன்றத் தேர்தல் முதலில் வருமா? என்பதில் எந்தத் தெளிவும் யாருக்கும் இல்லை. ஆனால், எந்த நேரத்தில் வேண்டுமானாலும் தேர்தல் வரும் என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது. அதனால், எந்தத் தேர்தல் வந்தாலும் அதைச் சந்திக்க ஒரு கட்சி வேண்டும் தினகரனுக்கு. அதனால், அதை ஆரம்பித்தே தீரவேண்டிய கட்டயாத்தில் இருக்கிறார் அவர். அதோடு, இவற்றை எல்லாம் தாண்டிய சில காரணங்களும், தினகரனின் தனிக்கட்சிக்கு இருக்கின்றன.
தாக்குப் பிடிக்க தனிக்கட்சி அவசியம்!
எடப்பாடி, ஓ.பி.எஸ் அணிகளுக்குள் உள்ளுக்குள் வெட்டுக்குத்து நடப்பதைப்போல் ஒரு தோற்றம் தெரிகிறது. ஆனால், அவர்கள் இணைந்து நடத்தும் ஆட்சி சலனமில்லாமல் நடக்கிறது. இந்த ஆட்சிக்கு டெல்லியின் ஆதரவும், நீதிமன்றங்களில் வசமாகச் சிக்கிக் கொண்ட வழக்குகளும் சாதகம் செய்கின்றன. ‘ஓ.பி.எஸ் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 11 பேரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்’ என தி.மு.க தொடர்ந்த வழக்கு, ‘தினகரன் ஆதரவு எம்.எல். ஏ-க்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்தது செல்லாது’ என்று தொடரப்பட்ட வழக்கு, சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என தொடரப்பட்ட மூன்று வழக்குகளிலும் நீதிமன்றம் தீர்ப்புச் சொன்னால்தான், ஆட்சி கலையுமா... தொடருமா... என்ப தில் உத்தேசமாகக்கூட ஒரு முடிவுக்கு வரமுடியும்! இந்த வழக்குகளில் தீர்ப்பு வெளியாகி, நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால், அந்தப் பரீட்சையில் வெற்றிகரமாக தப்பிப் பிழைக்க வும் எடப்பாடி பழனிச்சாமிக்கு வாய்ப்பும் இருக்கிறது. அது அரிதிலும் அரிதான நிகழ்வு என்றாலும், அவர் அதிகாரத்தில் இருப்பதால், அதைச் சாதிக்கவும் முடியும். அப்படி நடந்துவிட்டால், அது தினகரனுக்கு மிகப்பெரிய பின்னடைவாக போய்விடும். அதன்பிறகும் கட்சியும் இல்லாமல், சின்னமும் இல்லா மல் தினகரன் காலம் தள்ள முடியாது. எனவே, தேர்தலைச் சந்திப்பதற்கு மட்டும் அல்ல... நடப்பு அரசியல் சாத்திய அசாத்தியங்களை எதிர்கொள்வ தற்காகவே அவருக்கு தனிக்கட்சி அவசியம்.
குழுவின் தலைவனா... கட்சியின் தலைவரா?
நீதிமன்றத்தின் தீர்ப்பு, நம்பிக்கை வாக்கெடுப்பின் முடிவு என எல்லாம் தினகரனுக்குச் சாதகமாக நிகழ்ந்து, ஆட்சி கலைந்தால், அ.தி.மு.க கலகலத்து விடும் என்பது நிதர்சனம். அடுத்தநொடியே, இன்றைய அ.தி.மு.க-வில் எடப்பாடிக்கு விசுவாசமாக இருக்கும் நிர்வாகிகள், தொண்டர்கள் கொத்து க்கொத்தாக தினகரன் பக்கம் வந்துவிடுவார்கள்; அதில் யாருக்கும் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், அவர்கள் தினகரன் பக்கம் அதிகமாக வந்து சேர்வதால் மட்டுமே, அ.தி.மு.க-வும் இரட்டை இலையும் தினகரன் வசமாகிவிடாது!
முறையாக அ.தி.மு.க-வில் பொதுக்குழு கூட வேண்டும்; அதில் பெரும்பான்மையாக தினகரனுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற வேண்டும் என ஏகப்பட்ட சிக்கல்கள் அதில் இருக்கின்றன. பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம், இப்போதும் மதுசூதனனிடம்தான் இருக்கிறது; அவர் தினகரனுக்கு ஆதரவாக, பொதுக்குழுவை கூட்டுவாரா? அப்படிக் கூட்டினாலும், தினகரனிடம் கட்சியை ஒப்படைக்க ஏகமனதாக அங்கு தீர்மானம் நிறைவேறிவிடுமா? அதற்கு இமாலயத் தடைகளை ஏற்படுத்த, அந்தக் கட்சியில் இன்னும் நிறையப்பேர் இருக்கின்றனர்.
இந்தத் தடைகள் அனைத்தையும் உடைத்து, அ.தி.மு.க-வில் தினகரன் மீண்டும் அதிகாரத்துக்கு வருவது, இப்போதைக்கு நடக்கக்கூடிய காரியம் அல்ல; அதற்கான வேலைகளை பொறுமையாகச் செய்வதற்கு தனக்கு பலமான பிடிமானம் வேண்டும். ‘தினகரன் மீண்டும் அ.தி.மு.க-வில் இணைந்தார் என்றோ.., இணைத்துக் கொள்ளப்பட்டார் என்றோ...’ இருப்பதைவிட, தினகரன் கட்சி- அ.தி.மு.க இணைப்பு என்று இருக்க வேண்டும் எனக் கணக்குப்போடுகிறார் தினகரன்.
எடப்பாடியின் ஆட்சி கவிழ்ந்த பிறகு, அ.தி.மு.க-வில் அதுபோன்ற கோரிக்கையை வலுவாக எழுப்ப ‘ஸ்லீப்பர் செல்கள்’ தயாராக உள்ளனர்; ஆட்சி கவிழ்ந்தால் அந்தக் கோரிக்கை தானாக எழுந்துவிடும் என்றும் தினகரன் எதிர்பார்க்கிறார். அதுபோல, ஆட்சி கவிழ்ந்ததும், அ.தி.மு.க-வில் இருந்து தன்னிடம் வர நினைப்பவர்கள்கூட, ‘நாம் தனியாளாக இருந்தால் யோசிப்பார்கள்’. ஆனால், கட்சியாக இருந்தால், தைரியமாக முன்வருவார்கள் என்றும் கணக்குப்போட்டு வைத்துள்ளார்.
மேலும், கட்சி என ஒன்று உருவாக்கி பலப்படுத்தி வைத்திருந்தால், தன் கட்சியோடு அ.தி.மு.க-வை இணைப்பதற்கு நிபந்தனைகளை கறாராக விதிக்க முடியும். தனியாளாக இருந்தால், நிபந்தனைகளை கறாராக விதிக்க முடியாது. தன்னை நம்பி தற்போது இருப்பவர்களுக்கும் ஒன்றும் பெரிதாகச் செய்ய முடியாது. அதுபோல, இரண்டு கட்சிகளின் இணைப்பு பற்றிப் பேச்சுவார்த்தை உருவாகும் சமயத்தில், தினகரனின் நிபந்தனைகள் படி, அதைச் சாத்தியப்ப டுத்தலாம். குழுவின் தலைவன் தினகரன் என்பதைவிட, கட்சியின் தலைவனாக இருந்து, அ.தி.மு.க-வை வளைப்பதே சரியான வேலை என நினைக்கி றார் தினகரன். அப்படி நடந்தால் மட்டுமே, அங்கு தினகரனுக்கு பிரச்னை இல்லாமல் எதிர்காலம் இருக்கும்.
ஒருவேளை குழுவின் தலைவனாக மட்டும் இருந்துவிட்டு, தனியாகப்போய் அ.தி.மு.க-வில் இணைந்தால், அங்கே அவருக்கு குடைச்சல் கொடுக்க ஆளாளுக்கு அதிகாரம் வைத்துள்ளனர்கள். மதுசூதனன் திடீரென முரண்டு பிடிக்கலாம்; எடப்பாடி மீண்டும் தண்ணி கட்டலாம்; ஓ.பி.எஸ் மீண்டும் வேதாளமாக மாறலாம்; இப்படி ஆயிரம் பிரச்னைகள்.
மன்னார்குடி குடும்பத்தில் இருந்து விடுதலை!
தனியாளாகப் போராடிக் கொண்டிருக்கும் தினகரனுக்கு, டெல்லி பி.ஜே.பி, இ.பி.எஸ்-ஓ.பி.எஸ், தங்கமணி-வேலுமணி டீம் கொடுக்கும் தொந்தரவுக ளுக்கு எந்தவகையிலும் குறைந்ததல்ல மன்னார்குடி குடும்பம் கொடுக்கும் குடைச்சல்.
திவாகரன் இப்போதும் தனி ஆவர்த்தனம் செய்கிறார். அவர், எடப்பாடியோடு நல்ல தொடர்பில் இருக்கிறார். அதைப்பயன்படுத்தி அவ்வப்போது, தினகரனுக்கு செக் வைத்துக கொண்டிருக்கிறார். இதை இல்லை என்று திவாகரன் மறுக்க முடியாது; தினகரன் ஒதுக்க முடியாது. இரட்டை இலைச் சின்னத்துக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் தினகரன் திஹார் சிறைக்குப் போனதும், அடுத்த மாநிலச் செயலாளர் டாக்டர் வெங்கடேஷ்தான் என்று அவருடைய மாமனார் பாஸ்கர் கோமளவிலாஸ் கல்யாண மஹாலில் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்துவிட்டார்; பிறகு அது நடக்கவில்லை என்பது வேறுவிஷயம்!
இளவரசியின் வாரிசுகளில் கிருஷ்ணப்பிரியாவின் தினகரன் எதிர்ப்பு என்பது வெளிப்படையானது. அதில் மறைக்க ஒன்றும் இல்லை. விவேக்கின் உள்ளடி வேலைகளையும் தினகரன் உணராமல் இல்லை. இந்தத் தொல்லைகளில் இருந்து முற்றிலும் விடுபடவும், இந்தத் தொல்லைகளை முற்றி லுமாக ஒழித்துக் கட்டவும் தனிக்கட்சி மட்டும்தான் ஒரே தீர்வு என்று நினைக்கிறார் தினகரன்.
ஆட்சி கவிழ்ந்த பிறகு கலகலத்துப் போகப்போகிற அ.தி.மு.க-வில் மீண்டும் மன்னார்குடி குடும்பம் ஆதிக்கம் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. அந்தச் சூழலில், தினகரன் தனியாளாக உள்ளே போனால், அந்தக் குடும்பத்தின் குத்தல்களும், குடைச்சல்களும் தொடரத்தான் செய்யும். அவர்களை பாம்பென்று அடிக்கவும் முடியாது! பழுதென்று ஒதுக்கவும் முடியாது! ஆனால், தனிக்கட்சி ஒன்றைத் தினகரன் தொடங்கிவிட்டால், அதில் சசிகலா உள்பட மன்னார்குடி குடும்பத்துக்கு எந்தப் பாத்தியதையும் இருக்க முடியாது.
அதற்கு தினகரன் மட்டும்தான் தலைவன். தங்கதமிழ்ச் செல்வனும், வெற்றிவேல் உள்ளிட்ட இன்றைய தினகரன் ஆதரவாளர்கள் மட்டும்தான் தள பதிகள். எதிர்காலத்தில், அ.தி.மு.க-வோடு தினகரனின் கட்சி இணைந்தாலும், அல்லது அ.தி.மு.க-தினகரன் கட்சியோடு வந்து இணைந்தாலும், அதற்குள் மன்னார்குடி குடும்பம் ஆதிக்கம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுவிடும். இதையும் கணக்குப்போட்டுத்தான் தனிக்கட்சியைத் தொடங்கி உள்ளார தினகரன்!
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்