பத்துமலையில் தைப்பூச விழா கடந்த ஜனவரி 31ஆம் தேதி விமரிசையாக கொண்டாடப்பட்டது.பொங்கல் தினத்தில் இருந்து பொதுமக்கள் பத்துமலையில் தங்களின் நேர்த்திக்கடனை பூர்த்தி செய்ய தொடங்கி விட்டனர்.இதனால் தைப்பூசத்திற்கு முன்பும், பின்பும் பத்துமலைக்கு வருகைத் தந்த பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்தது.பத்துமலை தைப்பூச விழா முழுமையாக நிறைவு பெற்ற வேளையில் அதன் வரவுகளை மக்களுக்கு அறிவிக்க வேண்டிய கடப்பாடு தேவஸ்தானத்திற்கு உள்ளது.
அவ்வகையில் 2018ஆம் ஆண்டின் தைப்பூச விழாவின் மொத்த வரவு 25 லட்சத்து 15 ஆயிரத்து 639 வெள்ளியாகும். இது கடந்த 2017ஆம் ஆண்டைக் காட்டிலும் 5 ஆயிரத்து 836 வெள்ளி கூடுதல் வரவாகும். கடந்தாண்டு தைப்பூச விழாவின் வழி தேவஸ்தானத்திற்கு 25 லட்சத்து 9 ஆயிரத்து 803 வெள்ளி வரவு கிடைத்தது என்று அவர் குறிப்பிட்டார்.கடை வாடகைகளின் வழி தேவஸ்தானத்திற்கு 11 லட்சத்து 20 ஆயிரத்து 401 வெள்ளி வரவு கிடைத்துள்ளது.
Read More: Malaysia Nanban Tamil Daily on 24.2.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்