ஷா ஆலம்,
கோலசிலாங்கூரில் உள்ள கம்போங் சுங்கை யூ நிலம் வழங்கப்பட்ட விவகாரம் குறித்து மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.) மேற்கொண்டு வரும் விசாரணை தற்போது இறுதிக் கட்டத்தில் இருப்பதாக அதன் தலைமை ஆணையர் டான் ஸ்ரீ ஸுல்கிப்ளி அகமட் நேற்று தெரிவித்தார். பல்வேறு சர்ச்சைகளையும் ஐயப்பாடுகளையும் எழுப்பியுள்ள கம்போங் சுங்கை யூ இந்தியர் வீட்டுமனை திட்டத்தில் வெளியார்களுக்கும் பணக்காரர்களுக்கும் பெருமளவு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அங்குள்ள மக்கள் குற்றஞ்சாட்டியதைத் தொடர்ந்து எம்.ஏ.சி.சி. இதில் தலையிட்டு விசாரணையை தொடங்கியது.
இவ்விவகாரத்தில் சிலாங்கூர் மாநில அரசாங்கமும் அலட்சியம் காட்டி வந்துள்ள நிலையில், கோலசிலாங்கூர் மாவட்ட நில அலுவலகம் முன்புறம் பாதிக்கப்பட்ட மக்கள் பல தடவை மறியலில் ஈடுபட்டு வந்துள்ளனர்.பாதிக்கப்பட்ட மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க, அவ்வீட்டு மனை நிலத்திட்டத்தில் உறுதிக் கடிதம் பெற்றவர்களின் பெயர் பட்டியலை வெளியிடவும் நில அலுவலகம் மறுத்து வந்துள்ளது. அப்பட்டியலில் 175 பேரின் பெயர்கள் இடம்பெற்றிருப்பதாக நம்பப்படுகிறது.
Read More: Malaysia Nanban Tamil Daily on 12.2.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்