ஷா ஆலம்,
பண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் ரபிஸி ரம்லிக்கு நேற்று இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றம் 30 மாத கால சிறைத்தண்டனை விதித்தது. முன்னாள் வங்கி குமாஸ்தா ஜொகாரி முகமதுவிற்கும் இதே சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.நேஷனல் பீட்லோட் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் கணக்கு விவரங்கள் கசிந்ததன் தொடர்பில் வங்கி சட்டத்தை இவர்கள் இருவரும் மீறியதாக குற்றம் சாட்டப்பட்டது.
குற்றச்சாட்டுக்கு இலக்கான இருவரும் தாங்கள் குற்றமற்றவர்கள் என்று சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட முறையில் நிரூபிக்க தவறி விட்டதாக நீதிபதி ஜாம்ரி பாக்கார் குறிப்பிட்டார்.எனினும் இந்த இருவரின் வழக்கறிஞர்கள் அகமது நிஷாம் ஹமிட்டும் லத்திபா கோயாவும் மேல் முறையீடு செய்யவிருக்கிறார்கள். எனவே சிறைத்தண்டனை அமலாக்கத்தை நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.
Read More: Malaysia Nanban Tamil Daily on 8.2.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்