நிபோங் திபால்,
ஆசிரியையின் ஐபோனை திருடியதாக குற்றஞ்சாட்டப்பட்டு பெரும் அவமானத்திற்கு ஆளாகி, தற்கொலை செய்து கொண்ட இடைநிலைப்பள்ளி மாணவி வசந்தபிரியாவை ஐந்து மணி நேரம் ஓர் அறையில் அடைத்து விசாரணை செய்துள்ளனர் என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
பருகுவதற்கு நீர் எதுவும் கொடுக்காமல், கழிப்பறைக்கு செல்ல அனுமதிக்காமல் ஆசிரியைகள் மாறி-மாறி அவரை விசாரணை செய்துள்ளதாக தெரிகிறது. வசந்தபிரியா திருடியாக கூறப்படும் கைப்பேசியின் சொந்தக்காரரான பெண் ஆசிரியை ஒருவரும், அவரின் கணவரும் வசந்தபிரியாவை அவரின் வீட்டிற்கு விசாரணைக்காக கொண்டு செல்வதற்கு முன்பு ஓர் அறையில் அடைத்து வைத்துள்ளனர். அவரை விசாரணை செய்த ஆசிரியர்களில் ஒருவர் அடித்த தாகவும் கூறப்படுகிறது.வசந்தபிரியா எடுத்ததாக கூறப்படும் அந்த ஆசிரியரின் கைப்பேசி இதுவரையில் கிடைக்காத பட்சத்தில் ஒரு மாணவி தவறு இழைத்து இருந்திருந்தால் அதனை விசாரணை செய்வதற்கு நிலையான இயக்க நடைமுறையை (எஸ்.ஓ.பி.) ஏன் பின்பற்றப்படவில்லை என்பதுபோன்று பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
Read More: Malaysia Nanban Tamil Daily on 4.2.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்