ஜார்ஜ்டவுன்,
ஆசிரியரின் கைப் பேசியை திருடியதாக குற் றஞ்சாட்டப்பட்டதை தொடர்ந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட மாணவி எம்.வசந்தபிரியா நேற்று அதி காலை 3.30 மணிக்கு நினைவு திரும்பாத நிலையிலேயே மரணமடைந்ததால் அதிர்ச்சியிலும் துயரத்திலும் மூழ்கியிருக்கும் அவரின் குடும்பத்தினர், தங்கள் மகளின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்று மன்றாடுகின்றனர்.பதிமூன்று வயதான வசந்தபிரியா செபெராங் ஜெயா மருத்துவமனையில் மரண மடைந்தார். இவரின் மரணத்திற்கு நாடு முழுவதும் கண்டனக் குரல் எழுந்துள்ளது.
எங்கள் வசந்தபிரியாவுக்கு ஏற்பட்ட இந்த நிலைமை வேறு எந்த மாணவருக்கும் ஏற்படக்கூடாது. போலீசும் கல்வி அமைச்சும் உடனடியாக இச்சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.அம்மாணவியின் மாமா இது பற்றி போலீசில் புகார் செய்தும் ஒரு வாரமாகி விட்டது. ஆனால், இன்னமும் அவர்கள் தரப்பில் எந்த தகவலும் வெளியாகவில்லை. அதே சமயம், கல்வி துணை அமைச்சர் டத்தோ ப.கமலநாதன் நடவடிக்கை எடுக்கப்போவதாக அறிவித்திருந்தார். ஆனால், இதுவரை எதுவும் செய்யவில்லை என்று வசந்தபிரியாவின் குடும்பத்தார் சார்பில் பேசிய மலேசிய தமிழர் குரல் தலைவர் டேவிட் மார்ஷல் கூறினார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 2.2.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்