பெட்டாலிங் ஜெயா,
அரசாங்கப் பள்ளிகளில் சேர விரும்பும் நாடற்ற சிறார்கள் மீது இன்னும் நிபந்தனைகளை விதிப்பதற்காக மனித உரிமை ஆணையம் (சுஹாகாம்) அர சாங்கத்தை குறை கூறியுள்ளது. அரசாங்கம் மேற்கொண்டுள்ள நிலைப்பாடு கடுமையானது என்பதுடன் அவ்வகை சிறார்களுக்கு கேடு விளை விப்ப தாகவும் அமையும் என சுஹாகாம் தலைவர் ரஸாலி இஸ்மாயில் கூறியுள்ளார். குடியுரிமை விண்ணப்பங்கள் நிலுவையிலுள்ள நாடற்ற சிறார்கள் மட்டுமே அரசாங்கப் பள்ளிகளில் சேர முடியும் என துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி கடந்த ஜனவரி 11இல் கூறினார்.
அது குறித்து பேசிய ரஸாலி அரசாங்கத்தின் நிலைப்பாடு, நாடற்ற அகதிகளாக தஞ்சமடைந்துள்ள சிறார்கள் இதர சிறார்களுடன் அடிப்படைக் கல்வியைப் பெறும் தங்களின் உரிமையை தொடர்ந்து இழக்கும் நிலையை ஏற்படுத்தும். கல்வி வாய்ப்பு மறுக்கப்படும் சிறார்களின் குடும்பங்களிடமிருந்து சுஹாகாம் தொடர்ந்து பல புகார்களை பெற்று வருகிறது. குடியுரிமை அடிப்படையில் ஒரு வேறுபாட்டை ஏற்படுத்துவதை ஏற்றுக் கொள்ள இயலாது.
Read More: Malaysia Nanban Tamil Daily on 25.1.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்