(கு.ச.இராமசாமி - பார்த்திபன் நாகராஜன்) பத்துகேவ்ஸ்,
கடந்த சில வாரங்களாக பத்துமலையில் தைப்பூசத் திருவிழா அன்று ஆலயம் சாத்தப் படாது என்று நான் கூறிய கருத்துக்கு எதிராக பலர் மாற்றுக் கருத்து க்களை கூறி வருகின்றனர்.அண்மையக் காலமாக சந்திர கிரகணம் சூரிய கிரக ணம் பற்றி அதிகமாக தெரிந்து வைத்திருக் கிறேன். அதற்கு முன்பு இதைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது.
ஆனால், இம்முறை தைப் பூசத்தன்று சந்திர கிரகணம் வருவதால் இது பெரும் சர்ச்சையாக ஆக்கப்பட்டுள்ளது. எனினும் பல சமய அறிஞர்களுடன் தொடர்பு கொண்டு விவரம் பெற்ற பிறகே பத்து மலையில் லட்சக் கணக்கான மக்கள் கூடுகின்ற நாளில் ஆலய நடை சாத்துவது அவ்வளவு பொருத்தமாக இருக்காது என்று அறிவித்தேன் என்று நேற்று பத்துமலையில் நடைபெற்ற பத்திரிகையாளர்களுடனான சந்திப்பில் கோலாலம்பூர் மகா மாரியம்மன் தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ நடராஜா கூறினார்.மேலும் இது பக்தர்களுக்கு மிகுந்த அசௌகரியங்களை ஏற்படுத்தும் என்ற நோக்கமும் இதற்கு ஒரு முக்கிய காரண மாகும். ஏனெனில், ஒவ்வொரு ஆண்டும் வெளி மாநிலங்களில் இருந்து பயணப்பட்டு வரும் பக்தர்கள் ஒரு வாரம் வரை இங்கு தங்கி தைப்பூச நன்னாளை மிகவும் பக்தியுடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடுகின்றனர்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 24.1.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்