கோலாலம்பூர்,
கடந்த சனிக்கிழமை பாசார் போரோங் செலாயாங்கிற்கு செல்வதாகக் கூறி வீட்டை விட்டு வெளியேறிய வி.மோகன் (வயது 35), பி.விஷினி (வயது 28) தம்பதியர் கடத்தப்பட்டிருக்கக்கூடும் என அவர்களின் குடும்பத்தினர் சந்தேகிக்கின்றனர்.வீட்டிற்கு தேவையான சமையல் பொருட்களை வாங்கி வரச் சென்ற இவ்விருவரும் கடந்த 4 நாட்களாக வீடு திரும்பவில்லை என குடும்ப உறுப்பினர்கள் புகார் செய்துள்ளனர். காணாமல் போன நாளன்று அதிகாலை
3 மணியளவில் ஜாலான் தமிங் சத்துவிலுள்ள மோகனுக்கு சொந்தமான உணவகத்தில் அவ்விருவரையும் இறுதியாக கண்டதாக உறவினர் கே.காளிஸ்வ ரன் (வயது 48) தெரிவித்தார்.உணவகத்தை மூடிவிட்ட பின்னர் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி வருவதாக அவ்விருவரும் கூறிச் சென்றுள்ளனர். நீசான் வேனேட் ரக வேனில் செலாயாங் பாசார் போரோங்கிற்கு சென்ற அவ்விருவரும் இதுநாள் வரை வீடு திரும்பவில்லை.
Read More: Malaysia nanban Tamil Daily on 24.1.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்