(கு.ச.இராமசாமி - பார்த்திபன் நாகராஜன்)
பத்துகேவ்ஸ், ஜன. 24-
சந்திர கிரகணமும் சூரிய கிரகணமும் மக்களுக்கு தோஷமாகாது. அன்றைய தினம் ஆலய நடை சாத்தப்பட வேண்டும் என்று ஆகமத்தில் சொல்லப்ப டவில்லை. அதனால் மக்கள் தாராளமாக ஆலயத்திற்கு சென்று முருகப் பெருமானை வழிபடலாம் என்று தமிழ்நாடு மயிலாடுதுறை சிவபுரம் வேத சிவாகம பாடசாலையின் முதல்வர் சிவஸ்ரீ சுவாமிநாத சிவாச்சாரியார் நேற்று கூறினார். அண்மையக் காலமாக மலேசியாவில் தைப்பூசத்தன்று சந்திர கிரகணம் வருவதால் ஆலயத்திற்குச் செல்வதை ஒரு சிலர் பிரச்சினைகளை எழுப்பி வருகின்றனர். இது தேவையில் லாத வேலை. மக்கள் தாராளமாக ஆலயத்திற்குச் சென்று முருகனை வழிபடலாம் என்று அவர் கூறினார்.
தோஷம் என்ற வார்த்தையை பயன்படுத்தக் கூடாது. வருடத்தில் உள்ள 365 நாட்களில் 96 நாட்கள் புண்ணிய நாட்களாக விளங்குகிறது. அஷ்டமி, பௌர்ணமி, அமாவாசை போன்ற நாட்கள் சிறந்த நாட்களாகவே இருக்கின்றது. மனிதனுக்கு தோஷம் என்பது எங்குமே கிடையாது. மலேசியாவில் கொண்டாடப் படுகின்ற தைப்பூசம் உலக மக்களை கவர்ந்த ஒரு விழாவாகும். தமிழர்கள் மட்டுமல் லாது சீனர்கள், மலாய்க்காரர்கள் ஆசிய, ஐரோப்பிய மக்கள்கூட கலந்துகொண்டு கண்டு களிக்கின்ற ஓர் விழாவாகும்.
Read More: Malaysia Nanban Tamil Daily 24.1.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்