கோலாலம்பூர்,
நாட்டின் தலைநகர் கோலாலம்பூர், ஒரு காலத்தில் புறம் போக்கு குடிசை வீடுகளால் சூழ்ந்திருந்த போது அடிப்படை வசதியின்றி, மக்கள் அவதிக்கு ள்ளான துடன், அதிகமான சமூகப்பிரச்சினைகளுக்கு வித்திடும் கூடாரமாகவும் அவை விளங்கியிருந்தன. 2000 ஆம் ஆண்டுக்குள் குடிசையில்லா மா நகரை காண வேண்டும் என்ற அப்போதைய பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட், அன்றைய மாநகர் மன்றத் தலைவர் டான்ஸ்ரீ அலியாஸ் ஒமார் தீட்டிய பெருந்திட்டத்தின் விளைவாக, குடிசை வீடுகளிலிருந்து தலைநகர் விடுபட்டு, அவை வீற்றிருந்த இடங்கள் தற்போது பி.பி.ஆர். என்று சொல்லக்கூடிய குறைந்த வருமானம் கொண்ட மக்களுக்கான மாநகர் மன்றத்தின் வாடகை அடுக்குமாடி வீடுகளாக வானுயர காட்சி தருகின்றன.
மாநகரின் மையப்பகுதியில் கேந்திரம் முக்கியத்துவம் வாய்ந்த பங்சார், பந்தாய் டாலாம் பகுதியில் உயர்ந்து காணப்படும் 21 மாடிகளை கொண்ட பி.பி.ஆர். அடுக்குமாடி வீடுகளில் குடியேற்றப்பட்டவர்களில் 85 விழுக்காட்டினர், குடிசைப்பகுதியில் வாழ்ந்த மக்கள் ஆவர். குடிநீர், மின்சாரம், சாலை, தெரு விளக்கு, விளையாட்டு மையம், குப்பைத் தொட்டி கொட்டகை போன்ற வசதிகள் அன்று இல்லை. ஆனால், இன்று பி.பி.ஆர். அடுக்குமாடி வீட்டுப்ப குதிகளில் அத்தனை வசதிகளும் உள்ளன. குடியிருப்பாளர்களின் வாகனங்களை நிறுத்துவதற்குகூட போதுமான இடங்கள் ஒதுக்கி தரப்பட்டுள்ளன. வீடமைப்புப் பகுதி அருகிலேயே பொது போக்குவரத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
Read More: Malaysia Nanban Tamil Daily on 23.1.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்