பந்திங்,
கோலலங்காட் வாழ் மக்களுக்கு பிரதான சாலையாக விளங்கிவரும் பந்திங் - கிள்ளான் சாலை மட்டுமல்லாது இவ்வட்டாரத்தில் உள்ள பல சாலைகள் வாகனமோட்டிகளுக்கு மிகுந்த அசௌகரியத்தை ஏற்படுத்தும் அளவிற்கு மிக மோசமான குண்டும் குழியுமாக இருந்து வருவது குறித்து இவ்வட்டார மக்கள் தங்களின் ஆட்சேபத் தையும் அதிருப்தியையும் தெரிவித்து வருகின்றனர்.
இங்குள்ள சாலைகளில் ஏற்பட்டுள்ள குழிகளால் குறிப்பாக இரு சக்கர மோட்டார் வண்டிகளை பயன்படுத்து வோரின் உயிருக்கு உலை வைக்கும் அளவிற்கும் சேதமுற்றுள்ளதை சம்பந்தப்பட்ட தரப்பினர் கண்டும் காணாததுபோல் இருப்பதன் காரணம் புரியவில்லையென தினமும் பந்திங் - கிள்ளான் சாலையை பயன்படுத்தி வருவோரான கோ.ரகு, க.வினோத்ராஜ், பெ.அழகேந்திரன், மூர்த்தி, ஆ.கும ரேசன், முனியன் ஆகியோர் அதிருப்தி தெரி வித்தனர்.
தற்போது மழை காலமாக இருந்து வருவதனால் சாலைகளில் மழைநீர் நிரம்பும் வேளை எங்கு குழிகள் இருக்கிறது என தெரியாத நிலையில் வாக னங்களை செலுத்தும்போது பேராபத்தில் சிக்க நேரிடுகிறது. குறிப்பாக சாலைகளில் காணப்படும் குழிகளினால் வாகனங்களின் கீழ் பகுதி கடுமையாக சேதமுறுவதுடன் பலர் கீழே விழுந்துவிடக்கூடிய நிலை ஏற்பட்டு வருவதாக இப்பகுதியைச் சேர்ந்த இ.முனுசாமி, ஏ.முத்துவேல், பா.சோமசுந்தரம், டாக்சி யோட்டியான மோகன், பரமசிவம், ரா. பரமசிவம், மு.ராஜசேகரன் ஆகியோர் வேதனை தெரிவித்தனர்.
Read more: Malaysia Nanban Tamil Daily on 22.1.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்