(ஆர்.குணா) கோலாலம்பூர்,
தைப்பூச தினத்தன்று சந்திர கிரகணம் ஏற்படவிருப்பதால் அன்று ஆலயங்களில் கிரகண நேரத்தில் ஆலய நடைகள் மூடப்பட வேண்டுமென இந்து அமைப்புகள் திட்டவட்டமாக தெரிவித்தன.இது குறித்து மலேசிய இந்து சங்கத்தின் தலைவர் டத்தோ மோகன் ஷான் கூறுகையில், நம் நாட்டில் காலம் காலமாக கிரகண காலக்கட்டத்தில் ஆலயங்களுக்கு திருக்காப்பு போடப்படுகின்றது. ஆனால், இம்முறை சந்திர கிரகணம் தைப்பூச நாளன்று வருவதால் இது பெரும் விவகாரம் ஆகியிருப்பதாக அவர் தெரிவித்தார்.
தைப்பூச நாளில் மாலை மணி 7.48 முதல் இரவு 11.41 மணி வரையில் சந்திர கிரகணம் ஏற்படவிருப்பதாக இந்து பஞ்சாங்கங்கள் கூறுவதால் அந்நேரத்தில் ஆலய நடைகள் மூடப்பட வேண்டும். இந்த காலக்கட்டத்தில் ஆலயத்தில் பூஜைகள் நடந்தாலோ அல்லது பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை செய்தாலோ பல்வேறு பிரச்சினைகள் மனிதர்களுக்கு ஏற்படும் என இந்து ஆகமங்கள் தெரிவிப்பதாக மலேசிய இந்து சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலை மையகத்தில் இன்று மலேசியாவிலுள்ள இந்து அமைப்புகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலுக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறினார்.
Read More: Malaysia Nanban News paper on 20.1.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்