கருத்தடைக்கான ஆணுறைகள் பகிரங்கமாக விற்கப்படுவது பற்றி மூன்றாம் படிவ பி.டி.3 மாதிரி தேர்வில் கேட்கப்பட்ட கேள்வியும், ஒரு மாணவர் அதற்கு தந்த பதிலும் சமூக வலைத்தளங்களில் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அந்த கேள்வியும், குறிப்பிட்ட ஒரு மாணவர் அக்கேள்விக்கு தந்திருந்த பதிலும் நேற்று முதல் முறையாக சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இன்று வரை ஆயிரக்கணக்கான மலேசியர்கள் அதனை பகிர்ந்துள்ளனர். மிகவும் முக்கியமாக, கேட்கப்பட்ட கேள்விக்கு அந்த மாணவர் உண்மைபூர்வமான சரியான பதிலையே அளித்துள்ளார். எனினும், அந்த தேர்வுத்தாளை திருத்திய ஆசிரியர் பதில் தவறு என்று குறிப்பிட்டுள்ளார். பி.டி.3 மாதிரி தேர்வுக்கான அறிவியல் பாடத்தில் இக்கேள்வி கேட்கப்பட்டது. ஆணுறைகளை பகிரங்கமாக கடைகளில் விற்பது எதிர்விளைவுகளை ஏற்படுத்தும். இதனால் சமூகப் பிரச்சினைகள் எழுவதற்கு காரணமாகும். நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா? விளக்கம் தரவும்" என்பதுதான் கேள்வி. இதற்கு அந்த மாணவர் தந்த பதில் - இல்லை, ஆணுறைகள் கர்ப்பத் தடைக்கு தேவையான குழந்தை கட்டுப்பாட்டுக்கான ஒரு நடவடிக்கை" என்பதாகும். இருப்பினும், பதில் தவறு என்று ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். சமூக வலைத்தள பயனாளர்களில் சிலர் அறிவியல் பாடத்தில் அந்த கேள்வி கேட்கப்பட்டதற்கான காரணத்தை வினவினர். - அறிவியல் பாடத்திட்டத்தில் இந்த மாதிரியான முட்டாள்தனமான கேள்வி ஏன்? இதை நன்னெறி பாடத்தில் கேட்டிருக்க வேண்டும் என்று ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்