ஷாஆலம்,
போதைப்பொருள் விநியோக தொடர்பில் கைது செய்யப்பட்ட 5 இந்தியருக்கு தூக்குத் தண்டனை விதித்து ஷாஆலம் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. செமினி வட்டாரத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் போதைப் பொருள் விநியோகம் தொடர்பில் ஒரு டாக்சி ஓட்டுநர் உட்பட 5 இந்திய பிரஜைகளை போலீசார் கைது செய்தனர். அ. சற்குணன் (வயது 32), சுமேஷ் சுதாகரன் (வயது 30), அலெஸ் அபி ஜேக்கப் அலெக்ஸாண்டர் (வயது 37), ரஞ்சித் ரவீந்தி ரன் (வயது 28), சாஜித் (வயது 29) ஆகிய ஐவரும் செமிஞ்சே ஜாலான் சுங்கை லாலாங் பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் இருந்து 4,252 கிராம், 1,506 கிராம் எடை கொண்ட போதைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.அதே வேளையில் போதைப் பொருள் தயாரிப்பதற்கான ரசாயனங்கள் உட்பட பல பொருட்களையும் போலீசார் மீட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட ஐவரிடமும் மரபணு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் இப்பொருட்கள் அனைத்தும் இவர்கள் பயன்படுத்தி வந்ததற்கான ஆதாரமும் கிடைத்துள்ளது.
Read More: Malaysia Nanban News paper on 19.1.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்