கோலாலம்பூர்,
2012 ஆம் ஆண்டு அரசாங்கத்தின் சிறப்புத்திட்டத்தின் வழி (Pakej Rangsangan Khas 2012) தமிழ்ப்பள்ளிகளுக்கான கட்டுமானத்தில் ஏற்பட்டுள்ள தாமதத்தை தீர்ப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கல்வி துணை அமைச்சர் டத்தோ பி. கமலநாதனுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் நேற்று உத்தரவிட்டுள்ளார். மாணவர்கள் நல்லதொரு சூழலில், சௌகரியமாக மேற்கண்ட பள்ளிகளை பயன்படுத்துவதை உறுதி செய்ய தேவையான நடவடிக் கையை உடனடியாக எடுக்குமாறு கமலநாதனை பிரதமர் பணித் துள்ளார்.
2012 ஆம் ஆண்டு அரசாங்கத்தின் சிறப்புத் திட்டத்தின் கீழ் (Pakej Rangsangan Khas 2012) 100 மில்லியன் வெள்ளி செலவில் 39 தமிழ்ப்பள்ளி களுக் கான புதிய கட்டடங்களையும் 19 தமிழ்ப் பள்ளிகளுக் கான 18 கூடுதல் வகுப்பறைகளையும் கட்டுவதற்கு அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்தது. இந்த 39 பள்ளிகளில் 37 பள்ளிகள் இதுவரையில் பூர்த்தியாகாம லும், கட்டுமானத்திற்கு நிர்ணயிக் கப்பட்ட கால கட்டத்தையும் தாண்டி இன்னும் பூர்த்தியாகாமல் இருந்து வருவதை மலேசிய நண்பன் அண்மைய சில தினங்களாக முதல் பக்கத்தில் சுட்டிக்காட்டி வந்துள் ளது.
இப்பள்ளிகளின் புதிய கட்டடங்கள் கட்டி முடிக்கப் படாததால் சுமார் 10 ஆயிரம் மாணவர்கள் புதிய கல்வி ஆண்டில் நல்லதொரு கற்றல் - கற்பித்தல் சூழலில் கல்வியை தொடர முடியாமல், இன்னமும் பழைய கட்டடத்திலேயே இருந்து வருவது குறித்து மலேசிய நண்பன் மிகத் தெளிவாக சுட்டிக்காட்டி வருகிறது.
Read More: Malaysia Nanban News Paper on 18.1.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்