வரும் நவம்பர் மாதம் ஜப்பானில் நடைபெறும் பேட்மிண்டன் பயிற்சிக்காக கூலிம் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த ஆறாம் வகுப்பு மாணவர் வி.பூபதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நாடு தழுவிய அளவில் நடத்தப்பட்ட தேர்வின் முடிவில் அந்த வாய்ப்பைப் பெற்ற ஒரே இந்திய மாணவர் என்ற பெருமையைப் பெற்றார் பூபதி. வரும் நவம்பர் 19 ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை இந்தப் பயிற்சி தோக்கியோவில் நடைபெறவுள்ளது. மலேசியாவிலிருந்து 10 வயது முதல் 12 வயது வரையிலான இளம் பேட்மிண்டன் வீரர்கள் 30 பேரை இதற்காக தேர்வு செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. நாடு தழுவிய அளவில் நடந்த இந்தத் தேர்வில் 3,000 பேர் பங்கேற்றனர். அவர்களில் சிறந்த ஆட்டக்காரர்கள் 30 பேர் தேர்ந்தெடு க்கப்பட்டனர். அந்த 30 பேரில் ஒருவராக ஜப்பானுக்குச் செல்லும் வாய்ப்பைப் பெற்றார் பூபதி. இந்த இளம் வீரர்களின் தேர்வுக் குழுவில் இடம்பெற்றிருந்த முன்னாள் தேசிய பேட்மிண்டன் வீரரான வோங் சூன் ஹான், ஜப்பான் பயிற்சி செல்லும் சிறந்த வீரருக்குரிய தேர்வுச் சான்றிதழைப் பூபதிக்கு வழங்கினார். இதனிடையே இந்தத் தேர்வில் வென்ற பூபதிக்கு, இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை துணையமைச்சர் டத்தோ சரவணன் தம்முடைய நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். இந்தத் தகவலை அறிந்த பேட்மிண்டன் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுத்துறைகளைச் சேர்ந்த பலரும் பூபதிக்கு தங்களின் பாராட்டுதலையும் வாழ்த்துகளையும் கூறிக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்