(பி.ஏ.கந்தையா) ஊத்தான் மெலிந்தாங்,
கெப்பாக் என்னும் சிப்பிகளைச் சேகரிக்கச் சென்ற தன் கணவர் கடலில் மூழ்கி காணாமல் போய் மூன்று ஆண்டுகளைக் கடந்தும் அவரின் மரணச் சான்றி தழை வழங்காமல் தேசிய பதிவிலாகா இழுத்தடிப்பதாக கணவரை இழந்து தவித்துவரும் மாது ஒருவர் தேசிய பதிவிலாகா விற்கு எதிராகப் புகார் தெரி வித்தார்.
இங்குள்ள ஜாலான் ஊத்தான் மெலிந்தாங் பத்தாவது மைல் கம்போங் ஜெண்டராட்டாவில் வாடகை வீடு ஒன்றில் வசித்துவரும் சன்னாசியம்மா அப்பண்ணா (வயது 44) என்பவரின் கணவர் ஹொங் ஹோக் சுவான் (வயது 51) என்பவர் கடந்த 5-3-2016ஆம் ஆண்டில் காலை 11 மணியளவில் பாகான் டத்தோ பெத்திங் பெராஸ் பாஷா என்னும் இடத்தில் கடலில் மூழ்கி கெப்பாக் என்னும் சிப்பிகளை சக நண்பர்களுடன் பிடித்துக் கொண்டிருந்தவர் திடீ ரென கடலில் மூழ்கி மாயமானார்.
அவரின் சக நண்பர்கள் மீன்பிடி படகு மூலமும் நீரில் மூழ்கி எங்கு தேடியும் அவரோ, அவரின் சடலமோ கிடைக்கவில்லை. சக மீனவர்களும் தீய ணைப்புப் படைவீரர்களும் கடற் போலீசாரும் 10 நாட்கள் தேடியும் சடலம் கிடைக்காததால் தேடும் நடவடிக்கை கைவிடப்பட்டது.
Read More: Malaysia Nanban News Paper on 16.1.2017
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்