( நா. மணிராஜா)
சுங்கைப்பட்டணி, ஜன. 16-
கெடா மாநிலத்தில் உள்ள 58 தமிழ்ப் பள்ளிகளில் குறைந்த மாணவர்களின் எண்ணிக்கை கொண்ட 20 க்கும் மேற்பட்ட பள்ளிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களின் எண்ணிக்கை பெரியளவில் குறைந்து வருவதால் அப்பள்ளிகளின் எதிர்காலம் பெரும் நிச்சயமற்றதாக இருக்கின்றன. இந்தியர்கள் அதிகமாக வசிக்கும் நகர்ப்புற பகுதிகளில் அப்பள்ளிகளை இடம் மாற்றினால் மட்டுமே அவற்றின் எதிர்காலத்தை உறுதி செய்ய முடியும் என்று மக்கள் நம்புகின்றனர்.
கெடா மாநிலத்தில் மிகவும் பழைமையான தமிழ்ப்பள்ளியான டப்ளின் தோட்டம் பிரிவு 7 தமிழ்ப்பள்ளியில் புதிய கல்வி ஆண்டில் முதலாம் வகுப்பில் எந்தவொரு மாணவர் பதிவும் இல்லை. ஐந்தாம் மற்றும் ஆறாம் வகுப்புகளில் மட்டுமே ஐந்து மாணவர்கள் பயில்கின்றனர்.
இதேபோன்று 20 க்கும் மேற்பட்ட தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. நிலைமையை சமாளிக்க தற்போது கெடா மாநிலத்தில் இரண்டு தமிழ்ப்பள்ளிகள் நகர்புறங்களுக்கு மாற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கெடா மாநில தமிழ்ப் பள்ளிகளின் வாரிய மன்றத்தின் மேலாளர் கோ.குமரன் நேற்று இங்கு தெரிவித்தார்.
Read More: Malaysia Nanban News Paper on 16.1.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்