கோடீஸ்வரர் டான்ஸ்ரீ டி.ஆனந்த கிருஷ்ணன், ஆஸ்ட்ரோ ஆல் ஆசியா நெட்வொர்க்ஸின் துணைத்தலைவர் ரால்ப் மார்ஷல் ஆகியோருக்கு எதிராக இந்திய அதிகாரிகள் பிடி ஆணை பிறப்பித்திருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் தொடர்பான விவகாரத்தில் தேசிய போலீஸ் படைத் தலைவர் (ஐஜிபி) டான்ஸ்ரீ காலிட் அபு பக்கார் முந்திக் கொண்டு கருத்துரைத்து குழப்பத்தை ஏற்படுத்துகிறார் என்று வழக்கறிஞர் எஸ்.என்.நாயர் கூறினார். மலேசிய சட்டத்துறை தலைவர் (ஏஜி) ஒப்புதல் வழங்கிய பின்னரே, இந்திய அதிகாரிகளின் பிடி ஆணை தொடர்பாக மலேசிய போலீசார் நடவடிக்கையில் இறங்க முடியும் என்று நாயர் கூறினார். சம்பந்தப்பட்டவர்களை அயல்நாட்டில் ஒப்படைப்பதற்கான உத்தரவும் பிடி ஆணையும் ஒன்றாக பிறப்பிக்கப்படுவதுதான் வழக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார். எனினும், அவர்கள் இருவரும் பிடி ஆணையையும், அயல்நாட்டில் ஒப்படைப்பதற்கான உத்தரவையும் எதிர்த்து வழக்கு தொடுக்க முடியும். எனினும் இதற்கு கால அவகாசம் தேவைப்படும் என்று அவர் எப்எம்டியிடம் கூறினார். அயல்நாட்டில் ஒப்படைப்பதற்கான உத்தரவு இல்லாமல், அவ்விருவரையும் கைது செய்ய இந்தியா வெளியிட்டிருக்கும் பிடி ஆணை தொடர்பாக போலீசார் நடவடிக்கையில் இறங்க முடியாது என ஐஜிபி காலிட் நேற்று முன்தினம் கூறியிருந்தது மீது வழக்கறிஞர் இவ்வாறு கருத்துரைத்தார். ஐஜிபி முந்திக் கொண்டு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். பிடி ஆணையை செயல்படுத்தாமல், அயல்நாட்டிடம் எவரையும் ஒப்படைக்க முடியாது. இவை இரண்டும் ஒன்றாக செயல்படுத்தப்பட வேண்டும் என்றார் அவர். பிடி ஆணையையும் அயல்நாட்டில் ஒப்படைக்கும்படி கோரும் உத்தரவையும் செயல்படுத்த மலேசிய ஏஜியின் உதவியை இந்தியா நாடியதா என்பது பத்திரிகை தகவலை வைத்து பார்க்கும் போது தெளிவாக தெரியவில்லை என்று நாயர் கூறினார். அவர்கள் இருவருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கும் விவகாரத்தில் மலேசிய அதிகாரிகளிடம் இருந்து இந்தியாவின் மத்திய புலனாய்வுத்துறை (சிபிஐ) இடையூறுகளை எதிர்நோக்குவதாக தெரிய வருவதால், சிபிஐ மீண்டும் மலேசியாவிடம் விண்ணப்பிக்கலாம் என்றும் நாயர் விவரித்தார். இண்டர்போலின் உதவியையும் இந்தியா நாட முடியும் என்றார் அவர். அவ்விருவரும் வெளிநாடுகளுக்குச் செல்வார்களேயானால் அங்குள்ள இண்டர்போல் அதிகாரிகள் அவர்களை கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைக்க முடியும் என்று அவர் மேலும் கூறினார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்