பெட்டாலிங் ஜெயா,
மலேசிய கடப்பிதழ், ஆசியாவிலேயே நான்காவது நவீன தொழில்நுட்ப வசதி வாய்ந்த கடப்பிதழாக விளங்குகிறது. மலேசிய கடப்பிதழ் இரண்டு ஆண்டு கள் தொடர்ந்தாற்போல் இந்த நிலையை தக்க வைத்துக் கொண்டுள்ளது. தி ஹென்லி பாஸ்போர்ட் இண்டெக்ஸ் இந்த தரவரிசையை வெளியிட்டது.
மலேசிய கடப்பிதழ் வைத்திருப்பவர்கள் விசா இன்றி 166 நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள முடியும். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஆர்ட்டன் கேப்பிட்டல் பாஸ்போர்ட் இண்டெக்ஸ் வெளியிட்ட தரவரிசையில், மலேசிய கடப்பிதழ் 156 விசா இல்லா சலுகை புள்ளிகளுடன் உலக நிலையில் நான்காவது இடத்தில் இருந்தது. ஜப்பானும் 156 புள்ளிகளுடன் மலேசியாவுடன் சமநிலையில் இருந்தது.
ஒரு கடப்பிதழை வைத்திருப்பவர் விசா இன்றி எத்தனை நாடுகளுக்கு பயணம் செய்ய முடியும் என்பதை அடிப்படையாக ஹென்லி பாஸ்போர்ட் இண்டெக்ஸ் கடப்பிதழ்களை தரவரிசைபடுத்துகிறது. அனைத்துலக விமான போக்குவரத்து சங்கத்திடம் (ஐஏடிஏ) இருந்து கிடைக்கும் புள்ளி விவரங்களை வைத்து ஹென்லி பாஸ்போர்ட் இண்டெக்ஸ் தயாரிக்கப்படுகிறது.
Read More: Malaysia Nanban News Paper on 11.1.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்