கோலாலம்பூர்,
முறையான ஆவணங்கள் இல்லாத பட்சத்தில், தாய் அல்லது தந்தை மலேசிய பிரஜையாக இருப்பார்களேயானால், சம்பந்தப்பட்ட பிள்ளைகளை பள்ளிக்கூடங்களில் பதிந்து அவர்களின் கல்வியை மேற்கொள்வதற்கு இந்நாட்டு சட்டம் அனுமதி அளிக்கின்றது.ஆனால், அதையும் மீறி இம்மாதிரியான மாணவர்களை பதிவு செய்ய மறுக்கும் அவலம் இன்னமும் நம் தமிழ்ப்பள்ளிக்கூடங்களில் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
ஆவணங்கள் இல்லாத பிள்ளைகள் இங்கு கல்வி மேற்கொள்வதற்கு எந்தவிதமான தடையும் கிடையாது. இந்நாட்டின் பிரஜை என்ற அந்தஸ்து இல்லை என்றாலும் அரசாங்க பள்ளிக்கூடங்களில் அவர்கள் கல்வி பயிலலாம். அப்பிள்ளைகளின் பெற்றோரில் ஒருவர் மலேசிய பிரஜையாக இருந்தால் போது மானது என்று கல்வி துணை அமைச்சர் டத்தோ ப.கமலநாதனே அண்மையில் கூறியிருந்தார்.இருப்பினும், அது ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவோ அல்லது நடைமுறைப்படுத்தப்பட்டதாகவோ தெரியவில்லை.
காப்பார் நாடாளுமன்ற தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் உரிமை என்ற அரசு சாரா இயக்கத்தின் தலைவருமான எஸ்.மாணிக்கவாசகம் இதனால் பாதிக்கப்பட்ட ஐந்து குடும்பங்களைச் சார்ந்த பிள்ளைகளின் நிலவரம் குறித்து நேற்று, சுஹாகாம் ஆணையர் டத்தோ லோக் யிம் பெங்கிடம் மகஜர் சமர்ப்பித்தார்.
Read More: Malaysia Nanban News Paper on 11.1.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்