சிரம்பான்,
பள்ளித் தவணை தொடங்கி ஒரு வாரமாகி விட்ட வேளையில், அனைத்து மாணவர்களும் பள்ளிக்கு செல்வதை, பள்ளிக் கூட வாசலிலிருந்து கண்களில் பல எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கும் டர்ஷனாவிற்கு ஆதரவு சொல்ல முடியாமல் அவரின் வளர்ப்புப் பெற்றோர் தவித்துக் கொண்டிருக்கின்றனர். பி.கணேசன் மற்றும் வி. மல்லிகா தம்பதியருக்கு திருமணமாகி 11 வருடங்கள் ஆகிவிட்டன. அந்த 11 வருடங்களில், மல்லிகாவிற்கு 3 முறை கருச்சிதைவு ஏற்பட்டது.
தங்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டாமல் போய்விடுமோ என்று அவர்கள் பயந்திருந்த வேளையில், பிறந்த குழந்தை ஒன்றை தத்தெடுக்கும் பாக்கியம் அவர்களுக்கு கிடைத்தது.‘டர்ஷனா’ பிறந்த நான்கு நாட்களில், அவளின் பெற்றோர் அவளை தத்தெடுக்க கொடுத்து விட்டனர். 2011-ஆம் ஆண்டில், நவம்பர் மாதம் அவள் பிறந்தாள். அவளை நாங்கள் தத்தெடுத்தோம். ஆனால், நான்கு வருடங்களுக்கு பின்னர்தான், அவளை அதிகாரப்பூர்வமாக தத்தெ டுக்க முடிந்தது என்று டர்ஷனாவின் வளர்ப்புத் தந்தையான பி.கணேசன் தெரிவித்தார்.
Read More: Malaysia Nanban News Paper on 11.1.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்