எதிர்க்கட்சி கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றுமேயானால் நாட்டின் அடுத்த பிரதமராக வரக்கூடிய திறமைசாலி யார்? சிறைவாசம் புரியும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமா அல்லது அம்னோ விலிருந்து தூக்கியெறியப்பட்ட டான்ஸ்ரீ மொகிதீன் யாசினா என்ற சர்ச்சை எதிர்க்கட்சி மத்தியில் தலைதூக்கத் தொடங்கியுள்ளது. இருவருமே முன்னாள் துணைப்பிரதமர்கள். ஆனால், தங்களின் நோக்கம் ஒன்றாக இருந்தாலும் இரு வெவ்வேறு பாதையில் பயணிக்கும் எதிர்க்கட்சியினர் பிரதமர் விஷயத்தில் ஒருமித்த தீர்மானத்திற்கு வர இயலவில்லை. நாட்டின் அடுத்த பொதுத்தேர்தலில் நாங்கள் வென்றால் பார்ட்டி பிரிபூமி பெர்சத்து மலேசியாவின் (பெர்சத்து) தலைவர் மொகிதீன் யாசின்தான் பிரதமர் என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நேற்று அதிரடியாய் அறிவித்தார். ஆனாலும், பக்காத்தான் ஹராப்பானை பொறுத்த வரையில் அன்வார் இப்ராஹிம்தான் அடுத்த பிரதமர் என்று ஜ.செ.க. பிரச்சார பிரிவின் தலைவர் டோனி புவா நேற்று கூறியது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சி வெற்றிபெற்றால் மொகிதீன்தான் பெரும்பாலும் பிரதமராக பொறுப்பேற்பார் என்பதைத் தவிர வேறு எதையும் நாங்கள் இப்போது கூறவில்லை. ஆனால், இது அவருடைய கட்சியைப் பொறுத்தது. அவரை தேசியத் தலைவராக அவருடைய கட்சி தேர்ந்தெடுக்க வேண்டும். பிரதமராக எவர் வரவேண்டும் என்பதை எதிர்க்கட்சி கூட்டணி தீர்மானிக்க வேண்டும் என்று அவர் கடந்த வாரம் லண்டனில் உரையாற்றியபோது மகாதீர் கூறினார். எனினும், இப்போதைக்கு இந்த விவகாரம் தொடர்பாக எந்தவொரு முடிவும் எடுக்கப்படாது. இப்போதைக்கு முடிவு ஏதும் எடுக்கப்பட்டால் பலர் அதிருப்தி அடைவதோடு, கட்சியில் பிளவும் ஏற்படும் என்று முன்னாள் பிரதமரான டாக்டர் மகாதீர் கூறியதாக தி ஸ்டார் தெரிவித்தது. எதிர்கால பிரதமர் தன் விருப்பப்படி செயல்பட முடியாது. பிரிபூமி கட்சியில் தேசியத் தலைவரை மட்டுமின்றி அவைத் தலைவர் ஒருவரையும் நாங்கள் கொண்டிருப்பதே இதற்குக் காரணம். பிரதமர் தன்னிச்சையான முடிவு எதனையும் எடுக்கவில்லை என்பதை உறுதிப்படுத்த, அரசாங்க விவகாரங்கள் பற்றி கட்சியின் அவைத் தலைவருடன் கலந்தாலோசிக்கப்பட வேண்டும் என்று பெர்சத்து அவைத் தலைவருமான மகாதீர் கூறினார். இதனிடையே, பக்காத்தானின் முடிவே இறுதியானது. அன்வார்தான் எங்களின் அடுத்த பிரதமர் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்று டோனி புவா தெரிவித்தார். அன்வார் இப்போது ஐந்தாண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வருவதால் இது சாத்தியமாகுமா என்று அவரிடம் கேட்கப்பட்ட போது, அது பற்றி நாங்கள் பிறகு கவலைப்படுவோம் என்றார் அவர். ஓரினப் புணர்ச்சி வழக்கில் கடந்த 2015 பிப்ரவரி மாதம் அன்வாருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. கெராக்கான் இளைஞரணி தலைவர் டான் கெங் லியாங் இது பற்றி பேசுகையில், யார் பிரதமராக வருவது என்பதில் இவர்களால் ஒரு முடிவுக்கு வர இயலவில்லை. பிறகு, எவ்வாறு மலேசியாவை எதிர்க்கட்சி வழிநடத்தப் போகிறது என்று கேள்வி எழுப்பினார். ஒரு ஜனநாயக நாட்டில், எதிலும் சமசீர்படுத்தும் பணியினை ஆற்றுவதற்கு ஓர் உறுதியான எதிர்க்கட்சி நமக்கு தேவை. ஆனால், தற்சமயம் எதிர்க்கட்சி குழப்ப நிலையில் இருப்பதால் எதிர்க்கட்சியாக இருக்கக்கூட அவர்களுக்கு தகுதியில்லை என்றார் டான். மலேசியர்களை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தாமல் தங்களுக்கு யார் பிரதமர் என்பதை எதிர்க்கட்சி தீர்மானிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்