கோலாலம்பூர்,
வரும் பொதுத் தேர்தலையொட்டி பக்காத்தான் ராக்யாட் எனப்படும் நம்பிக்கை கூட்டணியின் பிரதமர் வேட்பா ளராக துன் மகாதீர் முகமட்டை தேர்வு செய்வதில் தனது நான்கு கட்சிகளுடன் கருத்திணக்க ஒப்பந்த உடன்பா ட்டை செய்து கொண்ட அந்த எதிர்க்கட்சி கூட்டணி, ஒப்பந்த உடன்பாட்டில் ஓர் இந்தியர்கூட கை யெழுத்திட அனுமதிக்காமல் போனது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூவினத்தவர்களுடன் இணைந்து நாட்டின் சுதந்திரத்திற்கு வித்திட்ட இந்தியர்கள், அக்கூட்டணியில் முற்றாக ஓரங்கட்டப் பட்டு ள்ளனர் என்பதற்கு அவர்களின் ஒப்பந்த பிரகடனமே சான்று என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நம்பிக்கை கூட்டணியின் 2018 ஆம் ஆண்டுக்கான பேராளர் மாநாடு, ஷா ஆலம், மாநாட்டு மையத்தில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் நம்பிக்கை கூட்டணி வரும் 14 ஆவது பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றால் அந்த கூட்டணியின் தலைவரும் பிரிபூமி பெர்சத்து மலேசியா கட்சியின் தலைவ ருமான துன் மகாதீர் முகமட், பிரதமர் வேட்பாளராகவும் பி.கே.ஆர். கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ வான் அஜிசா துணைப்பிரதமர் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ள வேளையில் தீபகற்ப மலேசியாவில் நம்பிக்கை கூட்டணி 165 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு போட்டியிடும் என்று தெரிவிக்கப்பட்டது.
Read More: Malaysia Nanban News Paper on 9.1.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்