(ஆர்.குணா) பூச்சோங்,
பூச்சோங் கம்போங் முகிபா புளோக் சி அடுக் குமாடிவாசிகள் நாள்தோறும் நரக வேதனையினை அனுபவித்து வருகிறார் கள். புளோக் சி என்பது 17 மாடிகள் கொண்ட ஒன்று. இங்கு இருப்பதோ மூன்றே மூன்று மின்தூக் கிகள். அடிக்கடி இந்த லிப்டுகள் பழுதாகி விடுகின்றன.
ஏக காலத்தில் எல்லா லிப்டு களுமே பழுதாகி செயலிழந்துவிடும் காலகட்டத்தில் இங்கு வாழும் குடும்பங்கள் அடுக்கடுக்கான அவதிகளுக்கு ஆளா கின்றன என்று பி.சாந்தி குமுறுகிறார். மூன்று லிப்டுகளை பராமரிக்கும் பணியினை கோலாலம்பூர் மாநகர் மன்றம் தனியார் ஒப்பந்த நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது. இவற்றை முறையாக பராமரிக்க இந்த தனியார் நிறுவனம் தவறிவிட்டது என்று அடுக்குமாடி குடியிருப்பாளர்களில் ஒருவரான எல்பட் தெரிவித்தார். நாங்கள் படும்பாடு பெரும்பாடு என்கிறார் எம். பிரேமா. இங்குள்ள மக்களின் சிரமங்கள் குறித்து சம்பந்தப்பட்ட தரப்பு அலட்சியம் காட்டுவது வேதனையாக இருக்கிறது என்கிறார் சி.சுப்பையா.
தள்ளுவண்டியில் வரும் வயோதிகர்களுக்கு மின்தூக்கி பழுது பெரும் பேரிடராக இருக்கிறது என்று ஸ்டான்லி கொந்தளிக்கிறார். காலையிலும் மாலை யிலும் பள்ளி சென்று திரும்பும் மாணவர்கள் தங்களின் இருப் பிடத்திற்கு செல்வதற்கு பெரும் சிரமத்தை எதிர்நோக்குகி றார்கள் என்று எம்.ரேணுகா தெரிவித்தார்.
Read More: Malaysia Nanban News Paper on 8.1.2018
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்